பழனி முருகன் கோவில் சிறப்புகள் !
பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து 115 கிலோ மீட்டர் மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.
இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது.
முருகனின் சிலை நவபாஷாணத்தால் சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது

நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்தது இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களை கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளதுங்க.இரவில் இந்த சிலையின் மீது ஆடி கிருத்திகை வழிபாடு !!முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இ
து மிகச் சிறந்த மருந்தாக கருதப்படுதுங்க. ஒரு நாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.
அப்பொழுது அருகில் இருந்த உமையால் அந்த பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும் விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
ஆனால் பரமசிவனோ பலத்தை பகிர்ந்தாள் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார் சிவபெருமான்.
பழனி முருகன்
குமரனும் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார் விநாயகனும் தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப் பழத்தை வென்றாருங்க.

இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினாருங்க.
அன்றிலிருந்து அவரது நின்ற இடம் பழம் நீ என அழைக்கப்படுகிறது.பழனி https://youtu.be/qWNUyrweXj4மலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன்.
அவர் பெரிய தராசின் மூலம் பழனி மலையும் இடும்ப மலையையும் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் சொல்லுதுங்க
புராணங்களில் இப்படியான பெயர் காரணங்கள் வழங்கப்பட்டாலும் பலனும் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலை தருகின்ற நிலத்தைக் குறிக்கும்.
அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானதுங்க.