புதன்பகவான் வழிபாடு நன்மை !
புதன்பகவான் வழிபாடு நன்மை ! பொதுவாகவே கிரகங்களுடைய வழிபாடு என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . எப்படிப்பட்ட கிரக பலன்கள் கெடுதலாக இருந்தாலும் சரி நாம் நவகிரகத்தினுடைய வழிபாட்டை மேற்கொண்டால் அது நம் வாழ்க்கையில் முகுந்த நன்மையை கொடுக்கும்
அந்த வகையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு இருக்கிறது.
அப்படியே புதன் பகவானே வழிபடும் பொழுது அறிவு, ஞானம் ,கல்வியில் சிறந்தவர் என நிறைய நன்மையை நம்மால் பெற முடியும்
புதன் பகவானுடைய கோவிலுக்கு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பானது அதிலும் புதன் பகவானுக்கு உரிய நாட்களில் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம்
எப்படிப்பட்ட படிக்காத குழந்தையாக இருந்தாலும் சரி புதன் பகவானுடையஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக கல்வியில் சிறந்தவராக விளங்குவார்கள்
புதன்பகவானுடைய வழிபாடு செய்தோம் என்றால் தொழிலில் உயரலாம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருது புதன் பகவானே
வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமையை கொடுக்கக்கூடியது வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்பது மிகப்பெரிய நம்பிக்கை
புதன் பகவானே வழிபடுவதற்கு உகந்த தலம் என்றால் அது திருவெண்காடு திருத்தலம் தான் நவகிரக தலங்களில் புதன் பகவானுக்கு உரிய தளமாக இந்த தளம் விளங்குகிறது
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி இங்கிருந்து பிரிந்து சென்றோம் என்றால் சாலையில் திருவெண்காடு திருத்தலத்தை அடைய முடியும்
புதன் என்னும் சொல்லுக்கு புத்தி என்று பொருள்படுது. புதன் பகவானுக்கு உரிய நிறமும் பச்சை நிறம் அதனால் தான் திருவெண்காடு தளத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தப்படுது.
புதன் பகவானுடைய வாகனமாக குதிரை சொல்லப்படுகிறது பச்சை பயிறு புதன்https://youtu.be/pt0RehsJJZg பகவானுக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்பதால் இந்த பச்சை பயிறு தான் வாரம்
வாரம் புதன் பகவானுக்கு நெய்வேதியமாக படைக்கப்படுகிறது இது மட்டும் இல்லாமல் வெண்காந்தல் மலர் கொண்டு அர்ச்சிப்பது மிக மிக சிறப்பு என சொல்லப்படுகிறது
புதன் பகவானுக்கு உரிய ஆபரணம் மரகதம் என்று விவரிக்கிறது .
இந்த கோவில் உடைய தலபுராணம் புதன்கிழமை நாட்களில் அவருக்கு உரிய மந்திரங்களை 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வழிபட்டோம்,
என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களும் தோஷங்களும் விலகிப் போகும் என்பது ஐதீகம்
புதன் பகவான் உடைய வழிபாடு வாழ்க்கையில் கல்வி அறிவு மிக்கவர்களாக நம்மை மாற்றுகிறது. புதன் பகவான் உச்சம் ஆட்சி பெரும் புரட்டாசி மாதம் அவருடைய வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .
புதன் ஹோரை என்பது காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு எட்டு மணி முதல் காலை 9 மணி வரையிலும் சொல்லப்படுகிறது
எனவே புதன் பகவானை வழிபடுவது மிகுந்த நன்மை என சொல்லப்படுகிறது எப்போதுமே நவகிரக வழிபாடு ஒரு மனிதனை மேம்படுத்தவே உதவுகிறது.