பாதாள செம்பு முருகனின் சுவாரசியமான வரலாறு:
பாதாள செம்பு முருகனின் சுவாரசியமான வரலாறு: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கப்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்திருக்குதுங்க.
இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இருப்பது.
அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னதிகள் அமைஞ்சுருக்குது. அதற்குள் எட்டுக்கு எட்டு அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்று இருக்கிறாருங்க.
பாதாளத்தில் செம்பு உலோகத்தில் ஆன முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்பு முருகன் என்ற பெயரும் ஏற்பட்டது.
தரைத்தளத்தில் ஒன்றும் பாதாளத்துக்குள் ஒன்றும் என இரண்டுசெவ்வாய்க்கிழமை விரத வழிபாடு ! கருவறைகளைக் கொண்டதாக இந்த கோவில் வடிவம் வைக்கப்பட்டு இருக்குது.
பாதாளத்தில் உள்ள கருவறைக்கு சென்ற முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறு இறங்கி செல்கிறார்கள்.
பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார்.
போகர் சித்தரையும் அவருடைய சீடர் புளிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர்.
இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கப்பட்டியில் வசித்து வந்தாரு.
இவர் ஒன்றரை அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தால் வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்தும் வந்தாரு.
நாளடைவில் வழிபாடு இன்றி போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்குhttps://youtu.be/2zimGHdU3Mg பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாரன் என்ற மிராசுதாரர் மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தாருங்க.
பாதாள செம்பு முருகனின் சுவாரசியமான வரலாறு:
இந்த சிலைக்கு முன்பு திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலை ஒன்றும் இருக்குதுங்க.
கோவிலில் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக காட்சி தராங்க.
கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன்சிலை அமைந்திருப்பது சிறப்பான ஒன்றுங்க. கோவிலுக்குள் வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுதுங்க.
நறுமணம் கமலும் இந்த விபூதி பல்வேறு நோய்களை குணமாக்கும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுது.
18 வகையான மூலிகைகளைக் கொண்டு இயங்கு விபூதி தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதுங்க.
திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார் சத்திரம் என்ற ஊர் இருக்குதுங்க.
அங்கிருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் பயணித்தால் ராமலிங்கம்பட்டி போக நகரில் உள்ள பாதாள சேம முருகன் கோவிலை சென்றடையலாம்.
இயற்கையில் கொஞ்சம் சூழலில் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பான ஒன்று. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவில் அமைந்திருப்பது சிறப்பு.
கருங்காலி மாலைகளை முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுதுங்க.
கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். பஞ்சபூதங்களின் துணையும் கிடைக்கும். எதிர்மறை சக்திகளும் விலகும்.
51 total views, 1 views today