ஆடி கிருத்திகையில் விரதம் இருக்கலாமா ?
ஆடி கிருத்திகையில் விரதம் இருக்கலாமா ? முருகப்பெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் ஆடி கிருத்திகை முக்கியத்துவம் பெறுகிறது.
அவருடைய ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்று அன்றைய தினம் காவடியடிப்பது பல அபிஷேகம் செய்து தண்டாயுதபாணியை வணங்குவது பார்க்க முடியும்.
ஈசனுடைய அருளால 6 நட்சத்திர பெண்களின் வளர்ப்பிற்கு அவர்களை கௌரவிப்பதற்காக இந்த கிருத்திகை விரதம் கொண்டாடப்படுகிறது
இந்த ஆடி கிருத்திகையில் முருகப்பெருமானுடைய கோவில்களுக்கு காமாட்சி விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் !சென்று சிறப்பு வழிபாடுகளையும் அபிஷேகங்களையும் அலங்காரகங்களையும் பார்த்து வந்தோம் என்றாலே நமக்கு புண்ணிய பலன் என்று சொல்லலாம்
குறிப்பா ஆடி மாதங்களில் அம்மனுடைய கோவில்களில் தான் சிறப்பான வழிபாடுகள் என்று கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இந்த முருகப்பெருமானுக்கான ஆடியில் வரக்கூடிய கிருத்திகை விரதம் என்றும் அல்லது கார்த்திகை விரதம் என்றும் சொல்லலாம்
இந்த விரதத்தை கடைபிடித்தும் என்றால் குழந்தை பேரு நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடக்கும் என்பது நிச்சயம் அப்படி ஆடிக் கிருத்திகையில் வழிபட்டோம் என்றால் தீராத நோயும் கூட தீர்ந்து போகும்னு சொல்லுவாங்க
அப்படி முருகப்பெருமானுக்கு உரிய வழிபாட்டு முறைகளில் தீயவை யாவும் ஓடிப்போகும் நல்லவை எல்லாம் தேடி வரும் என்று சொல்லலாம்
இந்த நாளில் சுவாமியை வழிபடும் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா என்று சொல்லக்கூடிய முழக்கத்தை கேட்க முடியும்
இவையெல்லாம் மிகவும் உணர்ச்சிவசமானதாக இருக்கும் அசுவினி பரணி கார்த்திகை நட்சத்திரத்தன்று உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் தங்களுடைய பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த ஆடி மாதம் கிருத்திகை இருக்கிறது
குறிப்பிட்டு திருத்தணியில் இந்த ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடக்கும்https://youtu.be/RGrkT3blqcc அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் சிறப்பான விழாவா இது நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்
ஆடி கிருத்திகையில் விரதம் இந்த நாளில் நாம் வழிபட்டோம் என்றால் முருகப்பெருமானுடைய அருளை முழுமையாக பெற முடியும்திருத்தணியில் முருகனுக்கும்,
பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது.
இந்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, ஆடி கிருத்திகைமிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
வள்ளியின் திருமணத்தலம். முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து தங்கியதால் “தணிகை மலை’ என்று பெயர் பெற்று திருத்தணி’ என்று மாறியது.
அசுரனோடு மோதியதன் காரணமாக மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது.
220 total views, 1 views today