மகா சிவராத்திரி:
மகா சிவராத்திரியில் செய்ய வேண்டிய செய்யக்கூடாதது என்ன ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் சிவராத்திரியில் மகா சிவராத்திரி அன்று மேற்கொள்ள வேண்டியவை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று முக்கியமாக குறிப்பிட்ட இந்த செயல்களை செய்யவே கூடாது என்று சொல்றாங்க அதேபோல இரவில் கண்விழித்து இருக்க வேண்டியது நமக்குத் தெரியும்.

ஆனால் சிவராத்திரி அன்று மேலும் sivaperumanஎன்ன மாதிரியான செயல்களை செய்ய வேண்டும் செய்யக் கூடாது அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி என்று இரவில் தூங்க கூடாது அதாவது சிவராத்திரி நாளில் பகல் இரவு மற்றும் அடுத்த நாள் பகல்வரையிலும் தூங்கக்கூடாது உதாரணமாக இன்று சிவராத்திரி என்றால் இன்று காலை முதல் அடுத்த நாள் வரை தூங்க தூங்காமல் இருக்க வேண்டும்.
அடுத்த நாள் ஆறு மணிக்கு மேல் தான் தூங்க வேண்டும் இதற்கு இடைப்பட்ட பகலிலும் இரவிலும் தூங்க கூடாது.

மகா சிவராத்திரி என்று காலை முதல் மறுநாள் காலை வரை உபவாசம் இருக்க வேண்டும் அதாவது பட்டினி விரதம் இருக்க வேண்டும்.
இந்த நேரங்களில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் கண் விழிக்கும் போது மற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது.
அதாவது போன் பார்ப்பது, பாடல் கேட்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது அதற்கு மாறாக சிவனை மட்டுமே நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு வீட்டில் அபிஷேகம் செய்யலாம் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்களான முக்கியமாக பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அபிஷேகம் செய்யலாம்.
சிவனின் நாமத்தை சொல்ல அதிகாலை முதல் மறுநாள் காலை வரை விரதம் இருந்து ஓம் நமச்சிவாய சிவாய நமக என்ற நாமத்தை அடிக்கடி சொல்லுவது மிகவும் நல்லது.
மேலும் தேவாரம் மற்றும் திருவாசகம் படைக்கலாம் முக்கியமாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில்https://youtu.be/Ui3YRmnrDqY தியானம் இருப்பது மிகவும் நல்லது.
இரவு முழுவதும் உறக்கம் இன்றி சிவனை நினைத்து கண் விழிக்கக்கூடிய பக்தர்களை நாம் பார்க்கிறோம்.
அதேபோல் நாமும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மிகவும் நன்மையான பலன்கள் நிறைய கிடைக்கும் இந்த நாளில் வீட்டில் பூஜை செய்ய விரும்பினால் சரியாக அந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

சிவலிங்கம், சிவன், பார்வதி உருவம், மஞ்சள் பூக்கள், வெள்ளைப் பூக்கள், அரச மர இலைகள், சாமி இலைகள், வில் வேலைகள், ரோஜா மல்லிகை பூக்கள், அபிஷேகத்திற்கு பசுவின் பால் தேன், நெய், சர்க்கரை, சந்தனம்.
கற்பூரம், பஞ்சாமிர்தம், நறுமணம் தூபம் ருத்ராட்சம், ஊமத்தை மலர்கள், கருப்பஞ்சாறு, கரும்புச்சாறு ,வெற்றிலை அருகம்புல் ஆகியவற்றை சிவனுக்கு அர்ப்பணிக்கலாம்.

இதுபோன்ற பொருட்களை நாம் சிவராத்திரியில் பயன்படுத்தி சிவ வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.