தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும் !!
தீபம் எந்த திசையில் ஏற்ற வேண்டும் !!
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மட்டுமில்லாமல் மக்களிடையே நன்மதிப்பும் நமக்கு கிடைக்கும்.
நேத்து திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும்.
சர்வ மங்களமும் பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. தக்காளி விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?எதிர்பாராத தொல்லைகளும் கடன்களும் பாவங்களும் வாழ்க்கையில் அதிகரிக்கும்.
திரிகளின் வகைகளும் அதனுடைய பலன்களும் !
பஞ்சுத்திரி சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாவது தாமரைத் தண்டு முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தாமரைத் தண்டு திரி போட்டு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றவேண்டும் .
அடுத்ததாக வாழைத்தண்டு திரி
குழந்தைப்பேறு இல்லையே என ஏங்குபவர்கள் வாழைத்தண்டு திரிபோட்டு வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு விளக்கு ஏற்றினால் குழந்தைப் பேறு கிடைக்கும். அடுத்ததாக வெள்ளெருக்குப் பட்டைத் திரி.
செய்வினை நீங்கவும் நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கு ஏற்ற வேண்டும் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானுக்கும் மிகவும் பிடித்தது இது.
தம்பதிகள் மனமொத்து வாழவும் மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை!
விளக்கு வழிபாடு என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.
இதனால் நமது வீட்டில் தெய்வீக பேரொளியும் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்வார்கள். பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்ட பின்னாடி வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள்.
அப்படி செய்யும் போது மனதில் ஒருவித உற்சாகமும் செயலில் ஒரு வித உத்வேகமும் பிறக்குமாம்.
புராண இதிகாச காலங்களில் நம்மளுடைய மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர்.
இதுவே மிகவும் எளிமையான மாற்றப்பட்டு சகலரும் https://youtu.be/qXUmtfmDhmYதங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கும் விதமாக விளக்கு வழிபாடு திருவிளக்கு பூஜை என சொல்லப்படுகிறது.
காஸ்மிக் பவர் என சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்கு பெற்றுத்தரும் சிறிய வடிவிலான ஆண்டனா என்று கூட விளக்கை சொல்லலாம்.
விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை போக்கும் அதோடு மட்டுமல்லாமல் மனதில் இருக்கக்கூடிய இருளையும் போக்கும்.
விளக்கின் சுடர் ஒளியில் மகாலட்சுமியும் ஒளியில் சரஸ்வதியும் வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
இதனால்தான் விளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்தால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாக பெறலாம். விளக்கில் பசு நெய் கொண்டு பஞ்சு திரியிட்டு விளக்கு ஏற்றுவது நல்லது.
பசு நெய் தீபத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபம் ஆகிறது.