ஸ்ரீபுரம் தங்கக் கோவில் இன் சிறப்புகள் ! !

Spread the love

ஸ்ரீபுரம் தங்கக் கோவில் இன் சிறப்புகள் ! !

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரிபுரம் தங்க கோவில் வேலூர் நகரத்தில் மாலை கொடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

மகாலட்சுமி காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோவில் முழுவதும் தங்கமுலாம் பூசப்பட்ட காட்சியளிக்கிறது.

இந்தக் கோவிலின் சிறப்பம்சம் அப்படின்னு பார்த்தா நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக,

இருப்பது திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோவிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டது.

இந்தக் கோவிலை கட்ட ஆறு நூறு கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 1500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

தங்க கோவிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கு கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும்

அதன் எதிரே செயற்கை நீரூற்றுகள் கண்களுக்கு இதமாக காட்சி அளிப்பது போன்ற நிறைய செயற்கையான சுவாரசியமான விஷயங்கள் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

இந்த ஸ்ரீபுரம் தங்கக் கோவில் மண்டபங்களை எல்லாம் தாண்டி பின்புறம் 18 வகையான குணங்களை இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமி நாராயணி கோவில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் அமைந்திருக்கும்.

இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.

கோவிலை சுற்றிலும் புல்வெளியும் அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் மாரியம்மன் சிலைகளும் மிக அழகாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

கோவிலுக்குள்ளே செயற்கையான மலைகளும் குளங்களும் நீர்வீழ்ச்சிகளும் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த கோவிலில் பல வகையான நவீன விளக்குகள் பழங்கால மாட கல் விளக்குகள் இது போன்றது நிறையவே காணப்படுது.

இவை அனைத்துமே இரவை பகல் போல மாற்றக்கூடிய ஒரு விஷயமாகவேhttps://youtu.be/tM97BYWCQhU இருக்கும். கோவிலுக்குள் ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று அருமையாக காட்சியளிக்கின்றன.

கோவிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழி எங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கு.

கோவிலில் நுழைந்து வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ மிகவும் அமைதியாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோவிலில் உலகின் மிகப்பெரிய வீணையும் 10,008 திருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொற்கோவில் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோவிலாகும். இந்த கோவில்களை எப்பொழுது திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் அப்படின்னா பவுர்ணமி வருடப்பிறப்பு ,

விழா ஸ்ரீ சக்தி அம்மா பிறந்தநாள் விழா சரஸ்வதி யாகம் தமிழ் புத்தாண்டு விழா நெட்டில் சக்தி அம்மன் ஞானம் பெற்ற தினவிழா வரலட்சுமி பூஜை ஸ்ரிபுரம் ஆண்டுவிழா

நவராத்திரி விழா தீபாவளி சிறப்பு வழிபாடு இப்படி ஏராளமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படும் என்று சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *