விருச்சிக ராசி மே மாத ராசிபலன் !
விருச்சிக ராசி மே மாத ராசிபலன் ! நிதானமாகவும் செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு. உங்களை எல்லோரும் நேசிப்பாங்க.
இந்த மாதம் உங்களுக்கு பணம் வரவு அதிகமாகவே இருக்கும்.
எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் பெற போறீங்க. மனம் மகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீங்க. நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உங்களுக்கு உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீங்க.
வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலனையே தரப்போகுது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரித்து காணப்படும்.
சிலருக்கு எதிர்பார்த்த பதிவு உயர்வும் கிடைக்கப்போகுது. குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சியும் உண்டாகும்.
உஷ்ணம் சம்பந்தமான நோய் வரக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பதன் மூலமாக நீங்கள் அதை தடுக்கலாம்.பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும். வின் விவகாரங்களில் தலையிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
விருச்சிக ராசி வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். திருப்பதி கருவறையில் நடந்த நிகழ்வு !கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் போகுது.
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பெயரில் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் கூட போகலாம்.
மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தே காணப்படும். கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளும் கிடைக்கும்.
விசாகம் நான்காம் பாதம்: இந்த மாதம் கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக கூட நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிலரை சண்டைகள் கூட உண்டாகலாம்.
எனவே கவனம் உடன் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படும் நிலை கூட உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.
அக்கம் பக்கத்தில் இருப்பவருடன் அனுசரித்து செல்வதுதான் உங்களுக்கு நல்லதுங்க.
அனுஷம்: இந்த மாதம் தொழில் நிமித்தமாக நீண்ட தூர பயணம் நீங்க போகhttps://youtu.be/AQQZ2s7Mimw வேண்டி இருக்கலாம். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாதுங்க.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாகவே இருக்கப்போகுது.
எதிர்பார்த்த புகழ் பாராட்டும் கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட போறீங்க. பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வார்கள்.
கேட்டை: இந்த மாதம் தாயின் உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களுடைய உடல் நலத்தை பொருத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகளும் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை கூட ஏற்படலாம்.
நல்ல பணப்புழக்கம் உங்களுக்கு இருக்கும். எடுத்த காரியமா உங்களுக்கு அனுகூலமாகவே நடக்கும். மதிப்பு மரியாதை உங்களுக்கு சீராக இருக்கும்.
குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையப் போகும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.
பரிகாரமாக கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க உங்களுக்கு அருள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். செல்வமும் சேரும்.
47 total views, 1 views today