ராகு கேது பெயர்ச்சியில் பாம்பு வந்தது உண்மையா

Spread the love

ராகு கேது பெயர்ச்சியில் பாம்பு வந்தது உண்மையா ??ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட கிரகம் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்ட கிரகம் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்பதற்கு பல புராணக்கதைகள் சொல்லப்படுகிறது.
மார்ச் 21 2022 அன்று ஏற்பட்ட ராகு கேது பெயர்ச்சியின் தாக்கமானது யாரையெல்லாம் பாதிக்கும் எனவும் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக யார் இந்த ராகு மற்றும் கேது என்பதை பார்க்கலாம்.
சூரியன் மற்றும் சந்திரனின் பழிவாங்க ராகுவும் கேதுவும் அம்மனை நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றுள்ளனர்.

இந்த வரத்தின்படி ராகு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில்https://youtu.be/lIRwnG1S14Q விழாது தடுக்கும் வரத்தை கொடுத்து உள்ளார் எனவும் இதையே கிரகணம் எனவும் நாம் அழைக்கிறோம் என்றும் புராணக் கதைகள் கூறுகின்றன. 


ராகு கேது அமிர்தம் பருகுவதால் அதிக பலமும் மரணம் இல்லாத வாழ்க்கையும் வாழலாம் என்பதை உணர்ந்த தேவர்கள் மற்றும் அசுரர்கள் அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர்.

மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி தேவர்களும்

அசுர

Dhanusu Rahu Ketu Peyarchi Palangal 2022 | தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி  பலன்கள் 2022 - 2023

ர்களும் இணைந்து பாற்கடலை கடைந்த போது அமிர்தம் ஆனது வெளிப்பட்டுள்ளது. அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் ஆகியிருந்தது.


அமிர்தத்தை அசுரர்களும் பருகினால் அவர்களை சமாளிப்பது கடினம் என்று உணர்ந்த தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

அசுரர்களுக்கு அமிர்தம் கிடைப்பதற்காக எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து அமிர்தத்தை பகிர்ந்துள்ளார்.

யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது.

திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோமேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும்

திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் ஆனது வழங்கப்பட்டது.


காஷ்யப மகரிஷியின் மகனான அசுரன் சுவர்பானுவிற்கு மோகினியின் வருகையும் அமிர்தம் பரிமாறுவதில் ஏதோ சதியும் உள்ளது எனவும் சந்தேகப்பட்டான்.

எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் மாறுவேடத்தில் தேவர்கள் வரிசையில் அமர்ந்து உள்ளார்.

இதனை ராகு சூரியனும் சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி சுவர் பானுவிற்கு அமிர்தம் கொடுத்து விட அதை அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான்.

இதை அறிந்த சூரியனும் சந்திரனும் உடனே மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறி உள்ளனர்.

மகாவிஷ்ணு கோபத்தோடு தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானு தன் தலையில் ஓங்கி தட்டினார்.

இதனால் தலை வேறு முண்டம் வேறு என இரு கூறுகள் ஆயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால்,

உயிர் போகவில்லை. ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள்.

இதனால் கோபம் கொண்ட அசுரர்கள் சுவர் பானுவை தன்னுடைய குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *