முத்துமலை முருகன் கோவிலில் நடந்த அதிசயம்!
முத்துமலை முருகன் கோவிலில் நடந்த அதிசயம் ! வாழப்பாடியில் உள்ள முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெகு விமரிசையாக நடந்தது.
உலகத்திலேயே மிக உயரமான முருகன் கோவில் அப்படிங்கற பிரசித்திப்பெற்றசபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ! கோவிலா இந்த முத்துமலை முருகன் கோவில் உள்ளது.
மலேசியாவில் 140 அடி உயரத்தில் இருக்கக்கூடிய முருகன் சிலையானது மிக உயரமான முருகன் சிலை என்று பெயர் பெற்றிருந்தது.
ஆனால் இப்போது சேலத்தில் அமைக்கப்பட்ட இந்த 146 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.
மலேசியாவில் இருக்கக்கூடிய முருகனை விட மிக உயரமான முருகன் என்ற சிறப்பு பெற்ற ஒன்றாக இந்த முத்து பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அதாவது சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் அருகில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வந்த உலகின் மிக உயரமான சிலை கொண்ட கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
2015ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2016 முருகன் சிலை உடைய திருப்பணி தொடங்கப்பட்டது.
மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜ ஸ்தபதியின் குழுவினர் தான் இந்த முருகன் சிலை வடிவமைப்பதில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நூத்தி நாற்பத்தி ஆறு அடி உயரத்தில் வசீகரிக்கும் சிரித்த முகத்துடன் வலது கை அபய ஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போலவும் இடது கையில் வேலை https://youtu.be/TgGY0MTZpggபிடித்து மணி மகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்கள் உடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.
இந்த முத்துமலை முருகன் சிலையின் பக்கத்திலேயே ஒரு லிப்ட் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலமாக பக்தர்கள் மேலேறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர்.
முருகனின் திருமேனியில் தங்க கவசம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியுள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக மலர்தூவ கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
இங்கே இருக்கக்கூடிய முத்துமலை முருகப்பெருமான் ஸ்வாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு ஏற்றார்போல் குன்றிருக்கும் முருகனின் கோவில் சிறப்பை விட பல மடங்கு சிறப்பு பெற்ற ஒன்றாக இந்த முருகன் கோவில் பேசப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த முத்துமலை முருகனை பார்கக பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருகை தருகின்றனர்.