மார்ச் மாத ராசி பலன் கன்னி ராசி 2025:
மார்ச் மாத ராசி பலன் கன்னி ராசி 2025: மார்ச் மாத கிரக நிலையை வைத்து பார்க்கும் போது கன்னி ராசி அன்பர்களுக்கு பெரியவர்களின் ஆசி ஆதரவு கிடைக்கும்.
எதிர்பார்த்த அளவுக்கு பணம் வரவு கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
உங்களுடைய அந்தஸ்து சமுதாயத்தில் நல்ல ஒரு மதிப்பு மரியாதை இது எல்லாம் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

தூரதேச பிரயாணங்களுக்கான சூழ்நிலையும் இந்த மாதத்தில்kailaiyamalai உங்களுக்கு அமையும் சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் தங்கு தடை இன்றி நடைபெறக்கூடிய யோகம் இருக்கு வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் தொழில் வியாபாரம் லாபகரமாக அமையக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
தொழிலை விரிவு படுத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள் அது எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமையும்.
எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம் எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு நன்மையை பெற்றுத் தரும்.

சூரியன் சஞ்சாரத்தால் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
எதிலும் நல்ல ஒரு முன்னேற்றமான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இஷ்டத்திற்கு விரோதமான காரியங்கள் நடந்தாலும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எதிர்பாராத அனுபவங்களை இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

உத்திரம்: இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டு சென்றவர்கள் விரும்பி வந்து ஒன்று சேர்வார்கள் உறவுகள் பலப்படும் அலைபேசி தொடர்பு மூலமாக நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வரும்.
உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியை தேடி தரும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த ஒரு குறைவும் இருக்காது வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

அஸ்தம்: இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்காக செலவு செய்வீர்கள் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம் கவனமாக இருப்பது நல்லது.
சனியின் சஞ்சாரத்தால் ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு https://youtu.be/SaydXXDM6AQவரும் இன்னொரு பிரச்சனை உருவாக வாய்ப்பு இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.

மகிழ்ச்சியான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருந்தாலும் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
குருவின் பார்வையால் உங்களுடைய பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தோய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிப்பீர்கள்.
சித்திரை: இந்த மாதம் எடுத்த காரியங்கள் உடனே வெற்றி கிடைக்கும் ஒரு சிலருக்கு தாமதமான வெற்றி கூட உங்களுடைய முயற்சி மூலமா வெற்றி கிடைக்கும் நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவதால் பெருந்தன்மை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது நல்லது.
பரிகாரம்: விஷ்ணு பகவானை தொடர்ந்து பூஜித்துவர நன்மை உண்டாகும் காரியத்தில் உள்ள தடைகள் நீங்கும்.