மார்கழி மாதம்:
மார்கழி மாதம் மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர் தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை உத்ராயன புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது.
அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம் எனவே மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதை போன்றது மிகவும் சிறப்புடைய ஒரு மாதம் தான்.

இந்த மார்கழி மாதம் எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த ஒரு மாதமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் வருடத்தில் ஒன்பதாவது மாதமாக வருவது தான் இந்த மார்கழிமார்கழி மாதம் சிறப்புகள்: இந்த மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவர்.
இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ண கோலம் இட்டு இறை வழிபாடு செய்வது மக்களின் வழக்கமாக உள்ளது.
இதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து உடல் நலனை பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டை பக்தர்கள் இந்த மாதத்தில் மேற்கொள்வதால் கிடைக்கும்.
இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும் ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படும்.
இதனால்தான் மரணத்தை வெல்லும் மார்கழி மாதம் என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.
அது மட்டுமல்லாமல் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், ஏகாதசி அனுமன்,ஜெயந்தி,பாவை நோன்பு,திருவெம்பாவை,நோம்பு படி உற்சவம், விநாயகர் சஷ்டிவிரதம்,உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள் பண்டிகைகள் விரத முறைகள் பின்பற்றப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும்.
இவ்விழாவானது ஆடலரசனான நடராஜனுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா. சிவபெருமான் ஆகணி வடிவாக நின்ற ஒரு நாள் என்பதால் திருவாதிரை சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது.
இதனால் ஆதிரையன் என்றும் சிவபெருமானை அழைக்கின்றனர்.https://youtu.be/kETSONcs5iA
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படும். ஒரு விழா வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
திருமாலை வழிபடும் விரத முறைகளில் இருந்து மிகச்சிறந்ததாக இந்த விழா கருதப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்கு பிரியமென துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரத முறை மேற்கொள்ளப்படும்.
விநாயகர் சஷ்டி விரதம்.இவரதும் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சற்று வரை மொத்தம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படும்.
இவ்விரத முறையில் ஆண்கள் வழக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் 21 இலைகளான காப்பினை கட்டிக் கொள்வார்.
கோவில்களில் அனுமனுக்கு மிகவும் சிறப்பு வழிபாடுகள் ஆராதனை அன்றைய தினம் மேற்கொள்ளப்படும்.
உற்பத்தி ஏகாதசி மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த தினத்தில் விரத முறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல செல்வங்களும் கிடைக்கும்.