மாரியம்மன் நிகழ்த்திய அதிசயம் !
மாரியம்மன் நிகழ்த்திய அதிசயம்! ஓசூர் அருகே மிகவும் பழமையான கிராம தேவதை கோவில் ஒன்று உள்ளது.வருடந்தோறும் இந்தக் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!பாகலூர் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில்,
ஓசூரில் உள்ள கோட்டை கோவிலில் அந்த மன்னர் வழிபட்டு வந்ததாகவும் பின்னர்,
பாகலூர் கிராமத்திலேயே வழிபட கோட்டை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர் திருவிழாவை நடத்தி வருவதாகவும் ,
450 ஆண்டுகளாக இந்த திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருவதாகவும் அங்கு உள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள்.
ஓசூர் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் ஒருநாள் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் தேரோட்டம் நடந்தது. விழா நிகழ்ச்சிகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
தேரோட்டம் நிகழ்வின்போது தேர் சாய்ந்து மறுபடியும் நின்ற அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது வீடுகளின் மீது சரிந்த தாகவும் அதன் பிறகு தானாகவே அந்த தேர் நிமிர்ந்து நின்ற அதிசயம் நிகழ்ந்ததாகவும் சொல்லப்படுது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை இழுத்துச் சென்றனர்.
விழாவில் பாகலூர் பேரிகை ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும் அருகிலுள்ள கர்நாடக எல்லைப் பகுதிகளான மாலூர் மாஸ்தி சம்பங்கி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேர் இழுத்து சாமி வழிபாடு நடத்தினார்கள்.
கோட்டை மாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நவராத்திரி தீபாவளி https://youtu.be/x0qjw4hPHfAதிருக்கார்த்திகை தைப்பொங்கல் மகாசிவராத்திரி தமிழ்வருடப்பிறப்பு ஆடிப்பிறப்பு விழா போன்ற விழாக்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழா இங்கு மிகவும் முக்கிய விழாவாகும் இந்த விழாவின்போது பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும் இந்த பூஜைகளின் போது சேலத்தில் உள்ள மற்ற ஏழு மாரியம்மன் திருக்கோவில் களுக்கும் இந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தான் பூ எடுத்து செல்லப்படும்.
அந்தப் பூவை வைத்து தான் பிற திருக்கோவில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும் .இது தொன்றுதொட்டு வரக்கூடிய நிகழ்ச்சி.
இந்த திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடக்கும். பூச்சாட்டுதல் ,கம்பம் நடுதல் சக்தி அழைப்பு சக்தி கரகம் உருள தண்டனை பொங்கலிடுதல் மகா அபிஷேகம் போன்றவை எல்லாம் இங்கு முக்கிய சிறப்பு திருவிழாக்களாக சொல்லப்படுகிறது.
மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை மறக்காம பின் தொடருங்கள் உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை நன்றி
381 total views, 1 views today