மாசி மாத ராசி பலன் விருச்சிகம் 2025:
மாசி மாத ராசி பலன் விருச்சிகம் 2025 விருச்சிக ராசிக்கு மாசி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் வக்ரக நிவர்த்தி ஆகி பலன் பெற்று அமர்ந்திருக்கிறாள்.
அதனால் தொட்ட காரியம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
தொகை வருமானம் அதிகரிக்கும் kaasi vishwanathar kovilஉடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

மருத்துவ செலவு குறையும் மன நிம்மதி கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாசி மாதம் இந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
சென்ற மாதத்தில் உங்கள் மனதில் நினைத்த காரியம் இந்த மாதத்தில் படிப்படியாக நிறைவேறும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் தைரியமாக செயல்படுவீர்கள் பல சாதனைகளின் இந்த மாதத்தில் நீங்கள் படைப்பீர்கள்.

ஆறுக்கு அதிபதியான செவ்வாய் எட்டில் சஞ்சரிப்பதனால் எண்ணற்ற மாற்றங்கள் இந்த மாதத்தில் நீங்கள் சந்திக்க நேரிடும் வருமானம் இல்லம் தேடி வரும் இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் சனி சேர்க்கை நடைபெறுகிறது.
உங்களுடைய ராசிக்கு தொழில் தானாதிபதி சூரியன் லாபத்தை ஸ்தான அதிபதி புதனோடு சுக ஸ்தான அதிபதி சனியோடும் இணைந்து சஞ்சரிப்பதனால் தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அடுக்கடுக்காக ஆதாயம் வந்து சேரும் உத்தியோகத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்.

ஊதிய உயர்வு உத்தியோகத்தில் மாற்றம் இது எல்லாம் இந்த மாதத்தில் கிடைக்கும் மேல் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் பலம் பெறுவதால் இதுவரை ஏற்பட்ட தடைகள் யாவும் விலக ஆரம்பிக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.

துணிந்து முடிவெடுப்பீர்கள் அருகில் உள்ள உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல்https://youtu.be/3nh0NRyHhCs அதிகாரியின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
நினைத்த அனைத்தும் கைகூடிவரும் பரிவர்த்தனை யோக காலத்தில் கல்யாணம் மணிவிழா கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகள் இந்த மாதத்தில் விருச்சிக ராசி அன்பர்களுக்கு அமைய வாய்ப்பிருக்கிறது.
மாசி மாதம் 14ஆம் தேதி புதன் அங்கு நீச்ச ல் பெற இருக்கிறார் உங்களுடைய ராசிக்கு அஷ்டமாதிபதி ஆனவர் புதன் அவர் நீச்சம் பெறுவது உங்களுக்கு நன்மைதான் சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்வீர்கள்.

எதிர்பாராத தன லாபம் கிடைக்கும் தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும் கரைந்த சேமிப்பு இனி அதிகரிக்கும் கடை திறப்பு விழா, கட்டிட திறப்பு விழா போன்றவை இந்த மாதத்தில் நடைபெறும் வாய்ப்புகள் இருக்கிறது.
மாணவர்கள் மதிப்பெண் கூடும் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள் பெண்களுக்கு நல்ல காரியங்கள் அனைத்தும் எல்லாம் தேடி வரும் பரிகாரம் குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை பெற்று தரும்.