மகரம் ராசி ! குரு பெயர்ச்சி பலன்கள்
மகரம் ராசி ! குரு பெயர்ச்சி பலன்கள் சனிபகவானை ராசிநாதனாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு நீங்கள் வாதாடுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள்
உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் கிரக நிலை சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சமா பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார் குரு பகவான் உங்களது பாக்கிய ஸ்தானம் லாப ஸ்தானம் ராசி ஸ்தானம் ஆகியவற்றை குரு பகவான் பார்க்கின்றார்.
நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருஷம் உத்தர ஆணையம் வசந்த ரிது சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பெயர்ச்சி ஏற்படப்போகுது
மே 1 தேதி அன்று கிருஷ்ணாபட்ச அஷ்டமையும் புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும், கூடிய அன்றைய தினத்தில் மாலை 5:15 குரு பெயர்ச்சி ஏற்படப்போகுது மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் மாற இருக்கின்றார்.
மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகள் கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க!இனி மந்தமான நிலை மாறும் தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள்.
உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் அள்ளிக் கொடுப்பீர்கள்
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் வசீகரமான பேச்சுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையும் பறைசாற்றும் விதமாக அமையும்.
வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
மகரம் ராசி குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும் குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் முழுமையான ஆதரவு உங்களுக்குத் தந்து கை கொடுப்பார்கள்
அதே நேரம் எதிலும் அவசரமும் பரபரப்பு வேண்டாம் தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம் அவர்களிடமிருந்து சுமூகமாக விலகிக் கொள்வது உங்களுக்கு நல்லது
கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பழகுவதை தவிர்ப்பது நல்லது
பண வசதிக்கு எந்த குறைவும் ஏற்படாது என்றாலும் கடினமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கு
சிலருக்கு அனாவசிய செலவு செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் https://youtu.be/YBNzTUv6lLkஅதனால் மனசோர்வுக்கு ஆளாகாமல் உங்களைப் பார்த்துக் கொள்வது நல்லது
உடல் நலத்தில் அக்கறை காட்டுவதும் உங்களுக்கு நல்லது குடும்பத்தில் மருத்துவ செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன கவனமாக இருப்பது நல்லது
உற்றார் உறவினர்கள் ஒன்றும் இல்லாத விஷயத்தை கூட பெரிதுபடுத்தி பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கின்றது
கவனமாக இருப்பது நல்லது பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும் செய்தொழிலில் அகல கால் வைக்க வேண்டாம்
மற்றபடி கோவிலில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும் தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்
சகோதரர் சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகள் எல்லாம் பேசி தீர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.
எனவே பொறுமையுடனும் பொறுப்புணர்வும் நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது மற்றபடி முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும் வேலையில் திருத்தி காண்பீர்கள்