பேசும் முருகப்பெருமான் !
பேசும் முருகப்பெருமான் ! குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்,
ஆனால் இங்கு வேறு எங்கும் இல்லாத அதிசயமாக மிக உயரமான மலை மீது முருகப்பெருமான் வீற்றிருந்து காட்சி கொடுக்கிறார்.
இந்தத் தல இறைவனுக்கு தனி சிறப்புகளும் உண்டு. சிவனுக்கு போதனைகளைக் கொடுத்ததால் இந்த முருகனை பேசும் முருகன் என்றும் அழைக்கின்றனர்.
இந்தத் தல புராணம் மிகவும் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.
ஒருமுறை பிரம்மாவிடம் இருந்த படைக்கும் தொழிலை கைப்பற்றினார்.
படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்தச் பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோசமயம் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் இருந்திருக்கிறது.
பிரம்மன் அந்த சமயத்தில் 5 கரங்களுடன் காணப்பட்டதால் அவருடைய தொழிலை அபகரித்துக் கொண்டதாலும் முருகன் ஐந்து தலைகளுடன் காட்சி கொடுத்தார்.
முருகப்பெருமான் படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இந்த உருவத்தில் தான் ஓதிமலை ஆண்டவர் ஆக இந்த திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த உருவத்தில் முருகப்பெருமானை வேறு எந்த கோவிலிலும் உங்களால் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முருகனுக்கு கவுஞ்சவேதமூர்த்தி என்ற மற்றுமொரு பெயரும் உண்டு. முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்கு முன்பு,
இந்தக் கோவிலின் மலை அடிவாரத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பே முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்பது இந்த கோவிலின் வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
முருகன் பிரம்மாவிடம் இருந்த பெற்ற படைக்கும் தொழிலை திரும்பவும் https://youtu.be/ATY-zwWWxlM பிரம்மனிடம் கொடுக்க வேண்டும் என்பதை கூறுவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வருகை புரிந்தார்.
இதனால் இந்த தளத்தில் அம்பிகைக்கு என்று எந்த ஒரு தனி சன்னதியும் கிடையாது.
சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் காணப்படுகிறது.
பிரம்மாவிடம் இருந்த படைக்கும் தொழிலை பெற்றுக்கொண்டு பிரம்மாவை இரும்பு சிறையில் அடைத்து வைத்து விட்டார். இதனாலேயே இந்த ஊருக்கு இரும்பரை என்ற பெயர் வந்ததாக வரலாற்று தகவல் உள்ளது.
போகர் சித்தர் ஒரு முறை பழனி முருகரை தரிசனம் செய்வதற்காக இந்த வழியில் வந்துள்ளார்.
அப்பொழுது அவருக்கு வலி சரியாக தெரியவில்லை என்ற காரணத்தால் இந்த தளத்தில் முருகப் பெருமானை நினைத்து தவம் இருந்துள்ளார்.
அப்பொழுது இந்த திருத்தலத்தில் உள்ள ஐந்து தலை ஒருதலை முருகனாக மாறி போக சித்தருக்கு பழனி மலைக்கு வழியைக் காட்டி கொடுத்துள்ளார்.
ஒரு முகமாக அவதாரம் எடுத்த இந்த தளத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் உள்ள குமராபாளையம் நாகநாதர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி கொடுக்கிறார்.
ஆறு முகங்களைக் கொண்ட முருகப் பெருமான் தன்னுடைய ஒரு முகத்தை கொண்டு வழி காட்டியதால் மற்ற ஐந்து முகங்கள் கொண்டு இந்த ஓதி மலையில் காட்சி கொடுப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் இது போன்ற ஒரு பயனுள்ள தகவல் உங்களுக்கு வேணும் அப்படின்னா மறக்காமல் நீங்கள் எங்களை பின் தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி.
348 total views, 1 views today