பெருமாளுடன் ஒன்றிணைக்கும் ஏகாதசி விரதம் !
பெருமாளுடன் ஒன்றிணைக்கும் ஏகாதசி விரதம் ! ஸ்ரீரங்கத்தில் ஆண்டதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கமாக கொண்டிருக்கும்.
ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது . ஏகாதசி விரதம் அனுஷ்டி எவ்வாறு என்பதை பார்ப்போம்.
தென் மாவட்டங்கள் தோறும் தோசை, இட்லி சகிதம் ஆகும். வடமாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
விரத தினமன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது ! வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் !என்று இவர்கள் நினைக்கிறார்கள்! ஆனால் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும்.
ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால் உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி இலையை சாப்பிட வேண்டும்.
பட்டினி கிடப்பதால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வும் கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
மேலும் ஏகாதசி என்று இறந்தால் முக்தி கிடைக்குமா என்ற கேள்விக்கு வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும் ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும்.
அதற்காக வைகுண்டத்திற்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது ஏகாதசி திதி என்று உயிர் மிகுப்பவர்களும் கூட அவரவர் பாவ புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று நம்புகிறார்கள்.
பெருமாளுடன் ஒன்றிணைக்கும் ஏகாதசி விரதம் !
இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார் என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும்
இறை பக்தியுடனும் தர்ம சிந்தனை உடனும் இனிய குணத்துடனும் https://youtu.be/NU6ViD80E6kஇருப்பவர்களை ஏகாதசி என்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பார்கள் .
ஏகாதசி என்று செய்யக்கூடாத விஷயம் என்னவென்றால் ஏகாதசி திதி முக்கியமாக வைகுண்ட ஏகாதசி நாட்களில் தாய் தந்தைக்கு சிரார்த்தம் வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி என்று நடத்த வேண்டும் .அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை கூட சாப்பிடக்கூடாது.
கூடுமானவரையிலும் கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்கவும் வேண்டும். குழந்தைகள் நோயாளிகள் முதியோர்களுக்கு கொடுக்கலாம்
ஏகாதசி என்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்திற்கு செல்வான் என்று கூறப்படுகிறது .
இந்த நாளில் துளசி இலை பறிக்கக் கூடாது தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும் இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்கள் கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மட்டுமே சொல்லப்படுகிறது.
இந்த பிரகாரங்களில் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கும் பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் ஆனால் இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயமாக சொல்லப்படுகிறது கோவிலின் பரப்பு 6,31,000 சதுர அடி ஆகும் அதாவது 156 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது
உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல கோவிலில் நடுவே பரமாத்மா இருக்கிறார்