பழனி முருகனுக்கு நடக்கும் பூஜைகள் !
பழனி முருகனுக்கு நடக்கும் பூஜைகள் ! விஸ்வரூப தரிசனம் காலை ஆறு மணி நடக்கும் முருகன் தன்னுடைய திருக்கோளத்தில் அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தையும் காட்டி நிற்பதே அவருடைய விஸ்வரூப தரிசனம் என்று சொல்லப்படுகிறது
முருகன் இத்தரிசனத்தை போர்க்களத்தில் சூரபத்மனுக்கு காட்டி அருளினார் என்று வரலாறு உண்டு அதை காண நாரதரும் மகரிஷி மகாவிஷ்ணு செந்தூருக்கு எழுந்திருந்தார்கள் என்பது தலபுராணம் பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் மூலவருக்கு தீபாரதனை செய்யப்படும்
பிறகு இறைவன் திருமேனியில் சாத்தப்பட்டு இருக்கக்கூடிய ராக்கால சந்தனமும் கௌபீன தீர்த்தமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்
திருப்பள்ளி எழுச்சி பாடல்களை ஓதுவார்கள் அமைதியான காலை வேளையில் பாடுவதை கேட்க புல்லரிக்கும்.
விழா பூஜையின் போது பழனி ஆண்டவன் தாமே தமது ஆத்மார்த்த மூர்த்தியாகியவாராகி அம்மன் வழிபாட்டு முறை ! சிவபெருமானை பூஜித்து வழிபடுவதாக ஐதீகம் சொல்லப்படுகிறது
ஆண்டவனுக்கு இடது பக்கத்தில் ஸ்படிகலிங்க வடிவில் ஈஸ்வரனும் அம்பிகையும் சாளக்கிராமமும் ஒரு வேலையில் வைக்கப்பட்டு இருக்கும்
முதலில் ஆத்மார்த்த மூர்த்திக்கு அபிஷேகங்கள் தீப தூப நெய்வேத்தியங்கள் ஏக தீபாராதனையும் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்

ஏனைய கால பூஜைகளில் ஆத்மார்த்த மூர்த்திக்கு தனி அபிஷேகம் இல்லை பூஜையில் பழனி ஆண்டவருக்கு காவி உடையோடு வைதீக கோலத்தில் அலங்காரம் செய்யப்படும்
சிறுகால சந்தி
பழனி முருகனுக்கு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைக்கு பின் நெய்வேதியம் ஏக தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கப்படும்
இந்த பூஜையின் போது பழனி ஆண்டவருக்கு குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படும் முருகன் திருக்கோளங்களில் அவருடைய குழந்தை கோலம் தனி சிறப்பு உடையது

கால சந்தி
சிறுகால சந்தியினைப் போலவே வழிபாடு நிகழும் உச்சி காலம் 12 மணிக்குhttps://youtu.be/soWtPFFNlxY ஆண்டவருக்கு அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்த பின்பு நெய்வேதியம் செய்து 16 வகையான தீபராதனைகள் காட்டப்படும்
அலங்கார தீபம், நட்சத்திர தீபம் ,ஐந்து முக தீபம் ,கைலாச தீபம் ,பாம்பு வடிவ தீபம், மயில் தீபம், சேவல் தீபம் ,யானை தீபம் ,ஆடுபடுவத தீபம், புருஷா மிருக தீபம் ,புரண கும்ப தீபம், நான்கு முக தீபம், மூன்று முக தீபம், இரண்டு முக தீபம் ,ஈசா நதீபம், கற்பூர தீபம் ,பிறகு வெண்சாமரம் கண்ணாடி சேவக்கொடி விசிறி ஆளவட்டம் இந்த காலகட்டத்தில் ஆண்டவனுக்கு கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம் செய்யப்படும்
சாயரட்சை (மாலை 5.30 மணி)
ஆண்டவனுக்கு அபிஷேக, அலங்கார அர்ச்சனைகள் செய்து முடிக்கப்பட்டதும் நைவேத்யம் செய்யப்படும். பதினாறு வகை தீபாராதனைகளும் சிறப்பு உபசாரங்களும் நடைபெற்ற பின் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.
ஆண்டவனுக்கு அரச கோலத்தில் அலங்காரம் செய்யப்படும்.
இராக்காலம் (இரவு 8 மணி) ஆண்டவருக்கு அபிஷேக அலங்கார அர்ச்சனைக்குப்பின் நைவேத்யம் செய்து, ஏக தீபாராதனை முடிந்த பின்னர் அன்பர்களுக்குத் தினை மாவு பிரசாதங்கள் வழங்கப்படும்