பழனியில் இப்படி ஒரு சுவாரசியமான மர்மமா ?

Spread the love

பழனியில் இப்படி ஒரு சுவாரசியமான மர்மமா ? பழனி இந்தியாவுல தமிழ்நாட்டுல கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்க திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி என்கிற வட்டத்தில் பழனி ஊராட்சி ஒன்றியத்துல நிர்வாக தலைமை இடமாகவும் நகரமும் தேர்வுநிலை நகராட்சி இடமாகவும் அமைஞ்சிருக்கு

இந்த பழனி கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது .ஒன்பது வகை பாசனத்தை கொண்ட முருகன் சிலை இங்கு உள்ளது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான திரு ஆவினன்குடி கோவிலும் இங்கு காணப்படலாம். சங்க கால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை பழனியில் காணப்படுகின்றன.

ஆறு படை வீடுகளில் முதலாவதாக பழனி கோவில் உள்ளது. தண்டபாணி கரும்பைத் தின்ற கல் யானை !சிலைக்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகப் படுகின்றனர்.

அவைகள் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம் ,விபூதி ஆகும்.

இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மற்றவை எல்லாம் எந்த பானையில் சிறையில் வைத்து ஆற்றப்படுகிறது. தண்டபாணி விக்ரத்துக்கு முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னீருக்கு மட்டும்.

இந்த பழனி ஆலயம் சேர மன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது.

எட்டு மற்றும் பதினொன்றாவது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பாண்டியர்கள் மற்றும் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை புதுப்பித்து பெரிதாக கட்டப்பட்டனர்.

அவர்கள் கலையில் வெளிப்படுத்தும் நோக்கமாக இந்த ஆலயத்தின் கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் உருவாக்கி இருக்கின்றனர்.


பழனியில் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களும் தங்களால் முடிந்த நன்கொடைகளை ஆலயத்திற்கு வழங்கி இருக்கின்றனர். முருக ப்பெருமான் குமரன் என்று மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு காணப்படும் பெரிய நாயகி அம்மன் ஆலயம் பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஒரு காலத்தில் பழனி மலை பாளையக்காரர்களின் தாயாக விளங்கி இருக்கிறது. பழனி பற்றிய வரலாற்று குறிப்புகள் பல ஆன்மீக ஏடுகளிலும் காண முடியும்.பழனி மலை

தை மாத மனிதர்களுக்கு புனித மாதமாக இருக்கிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒரே நாளில் வரும் நாளில் தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது.

தைப்பூசம் கொண்டாடப்படும் நாள்தான் உலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது. தர்ஹாசுரனை வதம் செய்த நாளாகவும் கூறப்படுகிறது.

சிவபெருமானுக்கும் பார்வதியும் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடிய நாள் தைப்பூசம் என்று கூறப்படுகின்றது. தைப்பூசம் அன்று பழனி கோவில் செல்பவர்கள் சில வழிமுறைகள் https://youtu.be/IXd6cvCaWD4பின்பற்றுகின்றனர். காவடி எடுத்தல், அன்னதானம் செய்தல் என அவரவர் வசதிக்கேற்ப வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

தீர்க்க காவடி எடுப்பவர்கள் கொடுமுடியில் இருந்து காவேரி தீர்த்தம் பக்தர்களால் நடந்தே எடுத்து வரப்படுகிறது.

மச்சக் காவடி என்னும் சிறப்பு வழிபாடு மீன் நீருடன் பக்தர்களால் காலால் நடந்து எடுத்து வரப்படுகிறது.

பால்குடம் காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது. சர்க்கரை காவடி என்பதை சர்க்கரை பொதி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் எடுத்து வருவதை மயில் காவடி என்று அழைக்கப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *