பங்குனி உத்திரம் ! விரதம் இருக்கும் முறை !
பங்குனி உத்திரம் ! விரதம் இருக்கும் முறை ! பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு முக்கியமான விரத நாட்களில் ஒன்று ஆகும் ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்பது பலராலும் அறியப்படாத ஒரு உண்மை
பங்குனி மாத பௌர்ணமி உத்திர நட்சத்திரமும் இணையும் நாளே பங்குனி உத்திரமாகும் அதாவது தமிழ் மாதங்களில் 12 வது மாதமாக வருவது பங்குனி உத்திரம்
அதே போல நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமாக வருவது உத்திர நட்சத்திரம் இவை இரண்டும் இணையும் நாள் என்பதனால் பன்னிரு கரங்களை உடைய முருகப்பெருமானுக்கு விரத நாளாக பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது

பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்களிலும் சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் மகா உற்சவம் பிரம்ம உற்சவம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது
அந்த வகையில இந்த வருடத்திற்கான பங்குனி உத்திரம் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி அன்று வருகிறது
இந்த நிலையில் பங்குனி உத்திர நாள் அன்று விரதம் இருக்கும்பூப்பெய்த பெண்ணுக்கு தர வேண்டிய உணவுகள்!
முறை விரதம் நூல் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்களை பற்றி ஒரு அர்ச்சகர் விளக்கம் அளித்திருக்கிறார்
பங்குனி உத்திரத்தன்று முருகன் பக்தர்கள் பகல் முழுவதும் உபவாசம் இருந்து இரவில் பால் பலம் மட்டும் உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம்
எந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் துவங்கி விடுவதால்
மார்ச் 24ஆம் தேதி இரவு எளிமையான உணவுகள் அல்லது பால் பழம் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு விரதத்தை துவங்கலாம்

மார்ச் 25ஆம் தேதி அதிகாலை எழுந்து குளித்துவிட்டு முருகனுக்கு உரிய வழிபாடுகளை செய்துவிட்டு அன்று முழுவதும் உபவாசம் இருந்து விரதத்தை தொடங்க வேண்டும்
முடியாதவர்கள் மார்ச் 25ஆம் தேதி இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம்.https://youtu.be/AUnJ0i38Ivs முடியாதவர்கள் அன்று மாலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்த பிறகு அங்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அவ்வாறு விரதம் இருப்பதால் முருகப்பெருமானின் அருளும் சிவபெருமானின் அருளும் முழுமையாக கிடைக்கும்
மேலும் பங்குனி உத்திர விரதம் இருப்பதினால் திருமண யோகமும் குழந்தை பேர் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவதால் அனைத்து தெய்வங்களோட அருளும் முழுமையாக கிடைக்கும்
அன்றைய நாள் மிகவும் சிறப்பான ஒரு நாள் அன்றைய நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
அனைத்து தெய்வங்களின் திருமண நாளாகவும் அன்றைய நாள் பார்க்கப்படுது அதனால் தான் பங்குனி உத்திரம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திரத்தில் அனைத்து தெய்வங்களோட அருளும் கிடைக்க வேண்டும் என்றால் பங்குனி உத்திர விரதம் மிக முக்கியமான ஒன்றாகும்.