பங்குனி உத்திரம்! இந்நாளில் முருகன் செய்யும் அற்புதம்!
பங்குனி உத்திரம் என்றதும் முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது முருகனுக்கு உரிய விரத நாளாக தான் அன்றைய தினம் பார்க்கப்படுது
தமிழ் மாதங்களில் 12 வது மாதமாக பங்குனியும் நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள் தான் பங்குனி உத்திரம்
அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திரத்திற்கு என்று ஒரு தனி சிறப்பு இருக்குது.
இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும் அபிஷேகம் செய்தும்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் செலுத்தி வருகின்றன.

வைகாசி பௌர்ணமி நாளை விசாகம் என்றும் தை மாத பௌர்ணமியை தைப்பூசம் என்றும் பங்குனி மாத பௌர்ணமியை பங்குனி உத்திரம் என்றும்
சித்திரை பௌர்ணமி அன்றும் கார்த்திகை பௌர்ணமி திருவண்ணாமலை தீபம் என்றும் மார்கழி பௌர்ணமி திருவாதிரை என்றும் வைத்து ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமி நாளையும் விரத நாளாக கொண்டாடி வருகின்றன
பங்குனி தை வைகாசி உள்ளிட்ட பல மாதங்கள் வரும் பௌர்ணமி முருகனுக்கு உரிய விரத நாட்களாக கருதப்பட்டு வருகின்றது.இந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது

மார்ச் 24ஆம் தேதி அது காலை 8 47 மணிக்கு உத்திர நட்சத்திரம் துவங்கி விட்டாலும் காலை 11 17 மணிக்கு தான் பௌர்ணமி திதி துவங்குகிறது ஆனால் மார்ச் 25ஆம் தேதி தான் சூரிய உதயசமயத்தில் https://youtu.be/iwiUwMbvyw4பௌர்ணமி திதியும் உத்திர நட்சத்திரமும் இணைந்து வருகிறது
இதனால் மார்ச் 25ஆம் தேதியை பங்குனி உத்திர நாளாக கணக்கில் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது.
சிவனின் மோனநிலையை கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக சிவன் தேவியை இந் தினத்தில் மணந்தார் என்பது அதிகமாக நம்பப்பட்டு வருகிறது.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகலன் அழகு செய்து மனவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க தேவர்கள் ஓதி ஓமவளர்த்து மந்திரங்கள் கூறி
தாலி கட்டு வாழ்த்துக்கள் கூறி அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளி அறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று புராண வரலாறுல சொல்றாங்க.
மேலும் இன் திருநாளில் தான் முருகன் தெய்வானை ராமன் சீதை ரங்க மன்னர் ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்களில் குறிப்பிட்டு சொல்லப்படுது
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இந்த அற்புதமான நாளில் தான் நடைபெறுகிறது.
அவ்வளவு அற்புதமான நாள்தான் இந்தப் பங்குனி உத்திரம் இந்த உத்திரம் முருகனுக்கு மட்டும் உகந்ததல்ல அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த ஒரு நாள் இந்த பங்குனி உத்திரம்