தீ மிதித்தலுக்கு பின் உள்ள அறிவியல் !
தீ மிதித்தலுக்கு பின் உள்ள அறிவியலும்! ஆன்மீகமும்! ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் என்பது நம்ப எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.
ஊரெங்கும் இருக்கும் அம்மன் கோவில்களில் அம்மனை வழிபட்டு அம்மனை மகிழ்விக்க பல்வேறு சிறப்பு வழிபாடுகளை செய்து
வரும் பக்தர்கள் அம்மனை குளிரவைக்க நெருப்புக்குள் இறங்குவதும் உண்டு.மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க! இந்து மதத்தில் இதிகாசங்களில் மட்டுமில்லை உலகில் இருக்கும் இதர மதங்களும் கூட அவரவர் போற்றும் மகான்கள் தீமிதி நடந்து வந்ததை குறிப்பிடுகின்றன.
வட இந்தியாவில் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்களும் தீ மிதிக்கிறார்கள். ஜப்பானில் புத்த மதத்தினரும் ஸ்பெயினில் கிறிஸ்துவர்களும் தீ மிதிக்கிறார்கள்.
சீனா இலங்கை தாய்லாந்து ஜப்பான் பிஜி தீவுகள் நியூசிலாந்து ஸ்பெயின் பல்கேரியா போன்ற உலக நாடுகளும் தீ மிதித்தல் செய்கின்றனர்.
தீ மிதித்தலுக்கு ராமாயணத்தில் ராமபிரான் சீதையை தூய்மையானவள் என்று உலகறிய வேண்டும் என்று அக்னியில் இறங்கி சொன்னதையும் குறிப்பிட்டு அக்னி பிரவேசம் செய்ததால் சீதை கற்புக்கரசி என்று புகழப்பட்டார் என்பதையும் புராண நூல் விளக்குகிறது.
முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில்களில் பல நூறு ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடப்பதை சரித்திரம் சொல்லுகிறது.
தீ மிதித்தல் என்பது இந்து சமயம் நேர்த்திக் கடன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதை அக்னி குண்டத்தில் இறங்குதல் பூ மிதித்தல் என்றும் பக்தர்கள் சொல்லுவார்கள்.
இதன் மூலம் இந்துக்களின் தெய்வீக நம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் கடினமானதாகவும் அதிக நம்பிக்கை கொண்டதாகவும் இருக்கும் என அறிந்து கொள்ள முடிகிறது.
ஆடி மாதத்தில்தான் பக்தர்கள் அம்மனை வேண்டி பூக் குழிக்குள் இறங்கி நடப்பார்கள் அதாவது தீ மிதிப்பார்கள். தீ மிதிக்கும் பக்தர்கள் தீ மிதிக்கும் நாட்களுக்கு முன்பாகவே அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருப்பார்கள்.
தீமிதிக்கும் நாளன்று அம்மன் கோயில்களில் வெளியே தீhttps://youtu.be/MdaO6sGrm2o மிதித்தல் அக்னி குண்டத்தை தயார் செய்வார்கள்
அந்தி சாயும் நேரத்தில் அம்மனை வேண்டி பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் முடிந்து சாமி ஆடியபடி நீர்நிலைகளில் நீராடி அல்லது மஞ்சள் தண்ணீரில் மூழ்கியபடி அம்மனின் பெயரை உச்சரித்த படியே பூக்குழிக்குள் இறங்குவார்கள்.
பக்தர்கள் பக்தியோடு நெருப்பு துன்பங்கள் நிறைந்த அக்னி குண்டத்தில் உள்ளே நடந்து வெளியில் வருவதை பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கும் அம்மனின் மீது பக்தியும் பரவசமும் பெருகும்.
தீ மிதித்து வருபவர்களின் உடல் உறுப்புகள் அல்லாமல் கால் பாதங்களிலும் எந்த விதமான பாதிப்புகள் இல்லாமல் இருப்பதை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
அதே நேரத்தில் தீ மிதிக்கும்போது பக்தர்களுக்கு காயம் உண்டானாலும் அல்லது தவறி விழுந்தாலும் அது அபசகுணம் ஆகவே பார்க்கப்படுகிறது இத்தகைய தீமிதி திருவிழா பக்தர்கள் பூமிதி திருவிழா என்று அழைக்கிறார்கள்
மாற்றுவதாக பக்தர்கள் எண்ணுகிறார்கள். பலநூறு பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த தீமிதி வைபவம் ஆடி மாதங்களில் சிறப்புகளில் ஒன்று.