தீயில் இப்படியும் இறங்குவார்களா ?

Spread the love

தீயில் இப்படியும் இறங்குவார்களா ? தீயில் இறங்க கொடிய செயலை பூ மிதித்தல் அப்படின்னு சொல்லுவாங்க. தீமிதி திருவிழா மிகவும் முக்கியமான நிகழ்வாக அம்மன் கோவில்களில் பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான அம்மன் கோவில்களில் திருவிழாக்களின் பொழுது பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற அம்மனுக்கு நேர்த்திக்கடனாக இந்த தீமிதி திருவிழா நிகழ்வை நடத்துகின்றனர்.

பெரும்பாலும் தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக காணப்படுகிறது.புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! இது நேற்று இன்று நடைபெறும் சம்பிரதாயம் கிடையாது. பல நூற்றாண்டுகளாக நம்முடைய இதிகாசங்களில் கூட காணப்படும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் அம்மன் கோவில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனாக இந்த தீமிதி திருவிழாவை நடத்துகின்றனர்.

இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் பல மதத்தினரும் தீயில் இறங்குவதை பல்வேறு முறையில் செய்துகொண்டுள்ளனர்.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளிலும் இதுபோன்ற நேர்த்திக்கடன்கள் நடைபெறுகிறது. கடவுள் மேல் உள்ள அதீத நம்பிக்கையின் காரணமாக பக்தர்கள் பயம் என்பது சிறிதும் இன்றி இதுபோன்ற செயல்களை செய்கின்றனர்.

தீ கங்குகளை அம்மன் முகங்களாக மாற்றுவார் என்ற எண்ணம் கொண்டு பக்தர்கள் இதை பூமிதி திருவிழா என்றும் அழைக்கின்றனர்

.இந்து மதத்தில் இதிகாசங்களில் மட்டுமல்ல உலகில் இருக்கும் இதர மதங்க ளும் கூட அவரவர்கள் போற்றும் மகான்கள் தீ மீது நடந்து வந்ததைக் குறிப்பிடுகின்றன.


வட இந்தியாவில் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்களும் தீயை மிதித்து வழிபடுகின்றனர். ஜப்பானில் புத்தமதத்தினரும், ஸ்பெயினில் கிறித்து வர்களும் இதனை பின்பற்றுகின்றனர். சீனா,

இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், பிஜி தீவு கள், நியூசிலாந்து, ஸ்பெயின், பல்கேரியா போன்ற உலக நாடுகளிலும் தீமிதித் தல் நடைபெறுகிறது.


இராமயணத்தில்  இராமபிரான், சீதையை தூய்மையானவள் என்று உலகம் அறிய வேண்டும் என்று அக்னியில் இறங்க சொன்னதையும், அக்னி பிரவேசம் செய்ததால் சீதை கற்புக்கரசி என்று புகழப்பட்டாள் என்பதையும் குறிப்பிடுகின்றனர்.


தமிழகத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில்களில் பலநூறு ஆண்டுகளாக  தீமிதி திருவிழா நடைபெறுகிறது என்பதை நம்முடைய புராணங்களில் இருந்து நம்மால் அறிய முடிகிறது.

தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் மிகவும் முக்கியமானhttps://youtu.be/N5YupMGJNDk ஒன்றாக கருதப்படுகிறது.இதை அக்னி குண்டத் தில் இறங்குதல், பூமிதித்தல், தீ மிதித்தல் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இதன் மூலம் இந்துக்களின் தெய்விக நம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் மற்ற மதங்களைக் காட்டிலும் கடினமானதாகவும் அதிக நம்பிக்கை கொண்டதாகவும் உள்ளது.

அதிகமாக இந்த அம்மன் பண்டிகைகள் ஆடி மாதத்தில் நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் அம்மனை வேண்டி பூக்குழிக்குள் இறங்கி தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். அதாவது தீமிதிப்பார்கள்.


தீமிதிக்கும் பக்தர்கள் தீமிதிக்கும் நாட்களுக்கு முன்பாகவே அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். தீமிதிக்கும் நாளன்று அம்மன் கோயில் களின் வெளியே தீமிதித்தலுக்காக அக்னி குண்டத்தைத் தயார் செய்வார்கள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *