திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் !
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ! கொங்கு நாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில் மூன்றாவது திருத்தலம் தான் இந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் 2000 கொடுங்கள தாண்டி இன்றைக்கும் செந்நிற மலை மேல் கம்பீரமாய் அமைய பெற்றிருக்கிறது
இந்த கோவில் இந்த திருச்செங்கோடு திருமலை சோனகிரி இரத்தினகிரி சேடமலை வாயு மலை மேலும் மலை என பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுது
திருவண்ணாமலையில் எப்படி கிரிவலம் செல்வது தனி சிறப்பு .அதேபோல இந்த திருச்செங்கோடு மாலையில் கிரிவலம் செல்வது குறிப்பிட்டு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் மாபெரும் புண்ணிய பலன் சுற்றி இருக்கக்கூடிய சில மலைகள் உடைய தரிசனத்தையும் பார்க்க முடியும்.
மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்று சிறப்புகளை பெற்றிருக்கிறது இந்த திருத்தலம் சிவனும் சக்தியும் அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில் அம்மையப்பன் என்னும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளிஉலகத்திலேயேமணி பிளான்ட் செடி ! இந்த தளத்தில் தான் சிறப்பான தரிசனம் கொடுக்கிறார்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் சிவனுடைய தேவார பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் 208 வது தேவாரத் தளம் இதுதான்
சாலை வழியாக மட்டுமில்லாமல் சுமார் 1210 படிகளை கடந்து மலைக்கோவிலை சென்றடைய முடியும் நாமக்கல் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து வடிவழியாகவும் செல்லலாம்
முதல் படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படி ஏற தொடங்கலாம் அருகிலேயே ஆறுமுகப்பெருமானது கோவிலும் அமைய பெற்று இருக்கிறதுகோவிலில் நந்தி கோவில் இருக்கிறது
பால், பசுக்கள் சம்பந்தமான வளம் பெறுக குடும்பம் செழித்து வளர நந்தி பகவானுடைய வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள் பொங்கலிட்டு வெண்ணை சாற்றி வழிபாடு செய்து கொள்கிறார்கள்.
நந்தி கோவில்ல இருந்து சற்றே கீழ இறங்கினால் நந்தி மலைக்கும் நாகமலைக்கும் இடையேபள்ளம் அமைந்திருக்கிறது
அதுவே நாகர் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் பூசி உள்ளனர். மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு. கோவிலின் உள்ளே நுழைந்த உடனேhttps://youtu.be/U9FOIj-Q13s விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுகிறோம்.
பின்னர் செங்கோட்டு வேலவனின் சன்னதியை அடைகிறோம். அருள்மிகு செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்தை சிற்பங்கள் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளன. ,
எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களிலும் பல்வேறு சிற்பங்கள் அணிவகுக்கின்றன. திருக்கோவில் எல்லா தூண்களிலும் சிற்பக்கலையின் உன்னதம் உச்சத்தைப் பெறுகிறது.
சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாட்டினையும், சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக,
நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்துடனும், சிற்பங்களை ரசிப்பதிலேயே அதிக நேரம் செலவானது.
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள்