தினமும் ராகி களி சேர்த்துக்கோங்க!
தினமும் ராகி களி சேர்த்துக்கோங்க! கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியை தினமும் சாப்பிடலாமா? யார் யாரெல்லாம் சாப்பிடலாம் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கலாங்க.
ராகியை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் முதல் இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் வரையிலும் எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாங்க.
மாறிவிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் எண்ணற்ற நோய்கள் பெருகிவிட்டதுங்க. அதிலிருந்து மீள்வதற்காக நாம் மீண்டும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம்.
அவற்றில் மிக முக்கியமானது சிறு தானிய உணவு முறைங்க.
குறிப்பாக வாடாமல்லையின் அற்புத பலன்கள் :நீரிழிவு பிரச்சனையால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த ஒன்றாக நம்முடைய சிறுதானிய உணவு முறை இருக்குதுங்க.
சிறு தானியங்களில் பல வகைகள் உண்டு. ராகி ,கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, பனி வரகு, சாமை, தினை என பல சிறு தானியங்கள் இருக்குதுங்க.
அவற்றின் பயன்பாடுகள் சமீப காலங்களில் அதிகரித்து இருந்தாலும் நெடுங்காலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் சிறுதானியங்களில் மிக முக்கியமானது ராகி என்று அழைக்கப்படுகிற கேழ்வரகு தாங்க.
கேழ்வரகு என்னும் ராகி கடுகை போன்று சிறிய சிறிய உருண்டை போல ஆடர் சிவப்பு நிறத்தில் இருக்குங்க.
இந்தியர்களின் உணவில் குறிப்பாக தென்னிந்தியர்களின் உணவில் இந்த ராகி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கேழ்வரகு உடலை குளிர்ச்சியாக்கும் பண்பு கொண்டது அதனால் கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுதுங்க.
இந்த கேழ்வரகில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு பிரச்சினை முதல் உடல் எடையை குறைத்தல் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருதுங்க.
அவை என்னென்ன என்று தொடர்ந்து பார்க்கலாம். ராகி கலி என்பது ராகி https://youtu.be/t-WFQ-iLTyEமாவை கொதிக்கும் நேரில் சேர்த்து வேகவைத்து
சிறிது உப்பு சேர்த்து வேகவைப்பதுங்க. மாவு வேக வேக கட்டி பிடிக்க ஆரம்பிக்கும்.
மாவு கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டுங்க.
ராகி மாவு நன்கு வெந்ததும் இறக்கி வெதுவெதுப்பாக இருக்கும் போதே காய்களில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி வைத்து விடுவாங்க.
அதை அப்படியே குழம்பு, பருப்பு, கூட்டு, துவையல் ஆகியவற்றோடும் கரி குழம்பிலும் சேர்த்து சாப்பிடுவாங்க.
இந்த உருண்டைகளை தண்ணீருக்குள் போட்டு குளிர வைத்து அடுத்த நாள் கெட்டி தயிர் கலந்து கரைத்து கூழாகவும் எடுத்துக் கொள்வாங்க.
இடுப்பைச் சுற்றிலும் சதை அதிகமாகி எடை அதிகரித்து அசிங்கமாக இருக்கிறதா? நீங்கள் கட்டாயம் ஒருவேளை உணவாக இந்த ராகி களியை எடுத்துக் கொள்ளுங்க.
தினமும் ராகி களி சேர்த்துக்கோங்க!
இதில் மிக அரிதான ட்ரைப் ஃடோபன் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்து இருக்குதுங்க. இது வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துதுங்க.
ராகியில் அதிக அளவு புரதமும் நல்ல கார்போகமும் அதிக அளவு நார்ச்சத்தும் இருக்குதுங்க.