தினமும் காமாட்சியம்மன் விளக்கை ஏற்றுவீர்களா ?
தினமும் காமாட்சியம்மன் விளக்கை ஏற்றுவீர்களா ? வீட்டில் தினமும் காமாட்சி விளக்கு ஏற்றுபவர்கள் மறக்காமல் இதை செய்யாமல் இருப்பது நல்லது. காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவதனால் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கிறது
உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்த தெய்வம் காமாட்சி அம்மன் அப்படி தவம் இருந்த வேலையில் சகல தெய்வங்களும் காமாட்சியம்மனுக்கு அடங்கியது
அதனால் தான் காமாட்சியம்மனை வழிபட்டால் ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்
அது மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் இது என்பது சிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்!தெரியாமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு காமாட்சியம்மனை குலதெய்வமாக நினைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்லும் மணப்பெண்ணை புகுந்த வீட்டில் முதல் முதலில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்ற சொல்வார்கள் ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் காமாட்சி விளக்கில் குலதெய்வம் இருந்து அருள் புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்ற சொல்வார்கள்
இதனால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதும் குளம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.
அதேபோல தினமும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றினால் குளம் தலைக்கும் வீட்டில் அனைத்து விதத்திலும் நன்மைகளும் மங்கலமும் உண்டாகும்
கிரக தோஷங்கள் இருந்தால் கூட அவை அனைத்தும் நீங்கிவிடும் வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்
சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்கள் மாறி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
காமாட்சி அம்மனை வழிபடும் முறை காமாட்சி விளக்கு ஏற்றும் போது ஒரு சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது
காமாட்சி அம்மன் விளக்கு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
விளக்கேற்றும்https://youtu.be/1NxAMp-UExY முன்பே அதை சுத்தப்படுத்துவது அவசியம் ஒரு முறையாவது காமாட்சி அம்மன் விளக்கை கழுவி சுத்தம் செய்வது நல்லது
அதேபோல விளக்கை தரையில் வைத்து ஏற்றக்கூடாது கோலமிட்டு கோலத்தின் மீது தாடையை வைத்து அந்த தட்டில் சிறிது பச்சரிசி கொட்டி அதன் மீது
காமாட்சி அம்மன் விளக்கை வைத்து அதன் பில் தாம்பலத்திலோ அல்லது தண்ணீர் மலர் தூவி அதன் மீது விளக்கை ஏற்றுவது ரொம்பவும் நல்லது.
இந்த விளக்கில் அம்மன் அமர்ந்த நிலையில் இருபுறமும் யானை இருக்கும் அதனால் விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து யானை ரூபத்திற்கு வைக்க வேண்டும்.
காலையில் பிரம்ம மோத்தத்தில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
தீராத கடன் பிரச்சினை உள்ளவர்கள் காலை 5 மணிக்கு முன்பாக எழுந்து காமாட்சி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் 48 நாட்கள் வழிபட்டால் கடன் பிரச்சினை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
விளக்கை பொதுவாக கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது வடக்கு மேற்கு திசைகள் சிறப்பானது தெற்கு நோக்கி மட்டும் ஏற்றக்கூடாது காமாட்சி விளக்கு மட்டுமல்லாமல் அகல் விளக்கு குத்துவிளக்கு எதுவானாலும் இந்த முறையை பின்பற்றுவது நல்லது.