ஜூன் மாத ராசிபலன் தனுசு ராசி
ஜூன் மாத ராசிபலன் தனுசு ராசி அமைதியுடன் சாந்தமாக பேசும் குணமுடைய தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கிறது? கிரகநிலை எவ்வாறு அமைந்திருக்கிறது
கிரகநிலை மாற்றம் எப்போது ஏற்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஜூன் மாத கிரக நிலை தைரிய வீரியஸ்தானத்தில் சனி சுகஸ்தானத்தில் சந்திரன் ராகு பஞ்சமஸ்தானத்தில் செவ்வாய் ரணருண ரோகிஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சூரியன் குரு தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் இந்த ஜூன் மாதம் 30 நாட்களும் அமைந்திருக்கிறது.
கிரக நிலை மாற்றம்: ஜூன் ஒன்பதாம் தேதி அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
ஜூன் 13ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் ரணறு ரோக கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
15ஆம் தேதி அன்று சூரிய பகவான் ரணறுன ரோக ஸ்தானத்திலிருந்து கலசர ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார். 26 ஆம் தேதி அன்று புதன் பகவான் களஸ்திர ஸ்தானத்திலிருந்து அஷ்டமஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
பலன்கள்: இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது பணவரவு வரும் உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள் .மனம் விரும்பியது போல் செயல்படுவீர்கள்
உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது உடல் https://youtu.be/kO0yTmxI1QMஆரோக்கியம் மேலும் வாகனங்கள் மூலமாக சில செலவுகள் உண்டாகலாம்
சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரத்து இருக்கும் வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்
வீடு மனை வாங்குவதில் உண்டான தடைகள் அனைத்தும் விலகும் தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும்
ஜூன் மாத ராசிபலன் தனுசு ராசி
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கலாம் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும் பழைய சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது திறமையாக செயல்பட்டால் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்
குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது
குழந்தைகளை பற்றி கவலை உண்டாகும் அவர்களுக்காக அதிகம் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியத்தில் தடை ஏற்படும் எதிர்பாராத செலவுகள் உண்டாக்கலாம்
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனமாக இருப்பது நல்லது எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவதால் நன்மை உண்டாகும்.
இந்த மாதத்தில் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்
கடன் பிரச்சினை தீரும் அரசியல் துறையினருக்கு நீங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நிதானமாக செயல்பட்டீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்