செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம் !
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம் ! செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும் .
முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
செவ்வாய்க்கு அதிபதி முருகன் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் மனதிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும்.
வீட்டில் திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும். குழந்தை பேறு தள்ளிப் போக கூடியவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும்.
எப்போது பார்த்தாலும் கணவன்-மனைவிக்குள் சண்டை என்றால் பழனி முருகனுக்கு நடக்கும் பூஜைகள் !அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்
செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுடைய கோவிலுக்கு சென்று வழிபட்டோம் என்றால் மிக நல்ல பலன்களை பெற முடியும் திருத்தணிகை முருகனையும் கந்தகோட்டை முருகனையும் முதலில் கடவுளாக கொண்டு வள்ளலார்
ராமலிங்க சுவாமிகள் செவ்வாய்க்கிழமை விரதத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார் விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மாபெரும் அமைதி உண்டாகும் என்பதே அதிகம் முருகனுக்காக கார்த்திகை விரதமும் மேற்கொள்ளப்படுகிறது
கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்தார்கள்.
அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் கொடுத்தார்
கார்த்திகை பெண்களே எம் குமரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனே வழிபடுபவர்களுக்கு செல்வம் கல்வி ஆயுள் நல்ல மக்கள் பேரு போன்ற பலன்களை அடைவார்கள் என்று அருள் புரிந்தாராம்
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி என்று இரவில் உண்ணாதி இருந்து https://youtu.be/soWtPFFNlxYகார்த்திகை என்று அதிகாலை நீராடி முருகவேளை வழிபாடு செய்ய வேண்டும் .
அன்று பகலில் உறங்க கூடாது என்று சொல்வார்கள் .கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தால் மாபெரும் புண்ணிய பலன்கள் உண்டாகும்
கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால் கார்த்திகை தீபம் என்ற பெயரும் உண்டானது
இந்த நாளில் நம்முடைய வீடு கோவில் மடம் சத்திரம் மலை உச்சி வாசற்படி மண்டபம் மூலஸ்தானம் வியாபார தளங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாக தீபங்களை ஏற்றலாம் கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு அருளியுள்ளார்
கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான் முருகன் ஆகியோருடைய முழுமையான அருளை பெறுவார்கள்
கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வை பெற முடியும் விநாயகரின் கட்டளைப்படி நாரத முனிவர் 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார் என புராணங்கள் வழியே சொல்லப்படுகிறது
முருகப்பெருமானுக்கு தீப தூப ஆரத்தி காண்பித்து அந்த முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்கள்.