சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்!
சூரிய பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது? உங்க ராசி இதுல இருக்கா? நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரிய பகவான் மாதந்தோறும் ராசியை மாற்றுவது வழக்கம். அப்படி அவர்களை மாற்றும் போதுதான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார்.அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுப வீட்டில் இருந்தால் வேலை, கவுரவம், பணம் போன்றவை கிடைக்கும்.
மேஷ ராசிக்கு சூரியன் செல்லும் போது சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும் அதிக பணமும் கிடைக்கும்.
இப்போது மேசம் செல்லும் சூரியனால் மே 15ஆம் தேதி வரை எந்த ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப் போகிறது என்பதை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால் வாழ்வின் பல அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
அரசு துறையில் இருப்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வருமான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளது.நிதி ரீதியாக மிகவும் வலுவாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12வது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால் இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஆதாயமடைவார்கள்.
ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர்கள் இந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை பார்ப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். திடீர் பண வரவை பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 11வது வீட்டிற்க்கு சூரியன் சென்றுள்ளதால் இந்த ராசிக்காரர்கள்https://youtu.be/L-ZeXkuAnxQ நல்ல பண ஆதாயங்களைப் பெறுவார்கள்.
நிதி நிலைமை வலுவாகும். தொழிலில் நீங்கள் எதிரிகளிடமிருந்து ஆதாயம் அடைவீர்கள். பணியிடத்தில் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பில் இருப்பீர்கள்.தொழிலை விரிவுபடுத்த பல புதிய திட்டங்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் பத்தாவது வீட்டிற்க்கு சூரியன் சென்றுள்ளதால் நல்ல புகழை பெறுவார்கள். வேலை செய்பவர்கள் முன்னேறுவார்கள்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் அல்லது அரசுத் துறையில் இருப்பவர்களும் இந்த பெயர்ச்சியால் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள்
.நிதி ரீதியாக இந்த காலம் சாதகமாக இருக்கும். வேலையில் இருந்தால் உங்கள் சம்பளம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் இந்தப் பெயர்ச்சியால் ஒன்பதாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நல்ல தாக்கம் இருக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களிடமிருந்து ஆலோசனையை பெற விரும்புவார்கள்.
தொழில் ரீதியாக இது உங்களுக்கு மிகவும் சாதகமான நேரம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் பலன் கிடைக்கும் .
உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகளும் திறக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.