சிறிய வாசல் கொண்ட சிவன் கோவில் !
சிறிய வாசல் கொண்ட சிவன் கோவில் ! விழுப்புரம் அருகே ஒரு கோடி கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவுக்கு உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட சிவன் கோவில் உள்ளது
இந்த கோவில் போல சிறிய வாசல் கொண்ட கோவில் உலகில் வேறு எங்கும் ஏன் கிடையாது
திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து 5 கிலோமீட்டர் சென்றால் அழகிய கிராமம் வரும்
இந்த கிராமத்திற்கு பெயர் ஒரு கோடி மொத்தம் 230 வீடுகள் மட்டுமே இங்கு காணப்படும் ஆயிரத்துக்கும்
குறைவான மக்களே இந்த கிராமத்தில் வாழ்கிறார்கள் இங்க இருக்கக்கூடிய பழமை வாய்ந்த சிவனுடைய கோவிலுக்கு ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்டு தவம் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது
அதனால் தான் இந்த கிராமம் ஒரு கோடி என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது
வைரக்கல்லால் கல்லால் ஆன சிவலிங்கம் !தற்போது அந்த சிவன் ஆலயம் சிதலமடைந்த நிலையில் காணப்பட்டாலும் இந்த கோவிலானது மிகச் சிறந்த வரலாற்று பின்னணியை கொண்டிருக்கிறது
இந்த சிவனுடைய ஆலயத்தில் பழமை வாய்ந்த சிற்பங்கள் இருக்கும்
கோவிலுக்கு முன்புறம் எல்லைப்பிடாரி அம்மன் சிலை இருக்கும் கோடி விநாயகர் என்று அழைக்கப்படக்கூடிய விநாயகர் குரு பகவான் கொற்றவை ஆகிய சிலைகளும் இருக்கும்
இங்கு இருக்கக்கூடிய பல சிலைகள் குறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு கோவில் அருகே நிறுவப்பட்டுள்ளதாகவும் கோவிலின் உள்ளே பல்வேறு அரிய வகை ஓலை சுவடிகள் இருந்ததாகவும்
அவை நாளடைவில் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது
இந்த கோவிலினுடைய மூலவர் முக்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் இந்த கோவிலினுடைய மூலவரை ஓலை படித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர் என்ற பெயரில் அழைக்கிறாங்க.
இதனால் இங்கு ஓலை சுவடிகள் இருந்தது என்ற மக்களின் கூற்று உண்மைhttps://youtu.be/M4iDCGbYQK4 எனவே புரிய வருகிறது.
கோவிலில் நுழைவதற்கு பக்கவாட்டில் வாயில் இருந்தாலும் மூலவருக்கு நேரே ஒரு கண் மட்டும் வைத்துப் பார்க்கக் கூடிய சிறிய வாசல் ஒன்று இருக்கிறது.
இதுதான் கோவிலுடைய வாசல் என்றும் உலகிலேயே மிகச் சிறிய வாசல் உள்ள கோவில் இது என்றும் மக்கள் சொல்கிறார்கள்
இது குறித்து கல்வெட்டில் ஆய்வாளர்கள் சொல்வது இந்த கோவிலில் உள்ள சிலைகள் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவை .
ஆனால் இந்த கோவில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது .கோவிலில் கொற்றவை பேச்சி அம்மன் மூத்ததேவி ஆகிய சிலைகள் சிற்பங்கள் இருக்கிறது.
இந்த கிராமத்திற்கு ஒரு கோடி என்று பெயர் வந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை ஒரு கோடி என்ற எண் அந்த காலத்தில் பயன்பாட்டிலேயே கிடையாது என்றும் சொல்லப்படுகிறது
எண்ணிக்கையை வைத்து இந்த பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் பல பேருடைய கருத்துக்கள் சொல்லப்படுகிறது