சமயபுரம் மாரியம்மன் சிறப்புகள் !

Spread the love

சமயபுரம் மாரியம்மன் சிறப்புகள் ! அம்மனின் சிறப்பு மிக்க திருவடிகளில் ஒன்று மாரியம்மன் இந்த அம்மன் ஊர் தோறும் வீற்றிருந்து அருள்பாலித்து வந்தாலும் சமயபுரம் மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவள்.

சமயபுரம் அன்னையைத் தேடி பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

சமயபுரம் மாரியம்மன் என்று ஊரின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படக்கூடிய இந்த அன்னைக்கு அகிலாண்ட நாயகி ஆயிரம் கண்ணுடையாள்

சாம்பிராணி வாசகி கௌமாரி காரண சௌந்தரி சீதள தேவி கண்ணபுரத்தாள் மகமாயி போன்ற சிறப்பான பெயர்கள் இந்த அம்மனுக்கு உண்டு.

சமயபுரம் மாரியம்மன் விக்ரகிரகம் மூலிகையால் ஆனது.

ஆதலால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த தல அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கருவறையை சுற்றிலும் எப்போதும் நீர் வகையில் கட்டப்பட்டு இருக்கும் இந்த அம்மன் ஆலயம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

பக்தர்கள் பலரும் இதற்கு மாலை சூட்டி தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !எட்டு திருகரங்களை கொண்ட சமயபுரம் மாரியம்மன் தன்னுடைய கரங்களில் கத்தி கபாலம் சூலம் மணிமாலை வில் அம்பு உடுக்கை பாசம் ஆகியவற்றை ஏந்திருக்கிறாள்.

தைப்பூசம் அன்று இந்த மாரியம்மன் கொள்ளிடம் கரையில் தென்பகுதியில் தீர்த்தவாரிக்கு வருவாள்.

அப்போது திருவரங்கம் அரங்கநாதர் தன்னுடைய ஆலயத்தில் இருந்து பட்டுப் புடவைகள் மாலைகள் தளிகைகள் போன்றவற்றை சீராக எடுத்து வந்து

தன்னுடைய தங்கையான சமயபுரம் மாரியம்மன் க்கு வழங்கும் நிகழ்வு இன்றளவும் நடந்து வந்துட்டு இருக்கிறது. எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும் பக்தர்கள் தான் அந்த ஆலையை இறைவனை வேண்டி விரதம் இருப்பார்கள்.

ஆனால் சமயபுரத்தில் தன்னுடைய பக்தர்களுக்காக அன்னை மாரியம்மன்https://youtu.be/SNDImmItaws விரதம் இருக்கும் நிகழ்வு இங்கு மட்டும்தான் நடக்கிறது.

எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும் பக்தர்கள் தான் அந்த ஆலய இறைவனை வேண்டி விரதம் இருப்பார்கள்.

ஆனால் இந்த அம்மனை விரதம் இருக்கக் கூடிய அற்புதமான காட்சியை பச்சை பட்டினி விரதம் என்று சொல்வார்கள்.

குறிப்பாக மாசி மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் தொடங்குகிறது. தொடர்ந்து 28 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார்.

பட்டினி விரதம் இருக்கும் 'சமயபுரம் மாரியம்மன்' | Samayapuram Mariamman  Viratham

உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய் தீவினை அணுகாது இருப்பதற்காகவும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் இந்த விரதத்தை அன்னை மேற்கொள்வதாக ஒரு ஐதீகம் உண்டு.

சமயபுரம் மாரியம்மன் க்கு செய்யப்படும் பிரார்த்தனையில் கரும்புத்தூளி எடுத்தல் என்பது மிகவும் பிரசாதிவானது.

குழந்தை பேரு வாய்க்காத தம்பதிகள் அன்னையை வழிபட்டு குழந்தை பிறந்ததும் இந்த நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அன்னையின் அருளால் கருவுற்று அந்தப் பெண்ணுக்கு சீமந்தம் முடிந்தபின் சீமந்த புடவை கணவரின் வேஷ்டியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *