சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!
சபரிமலை வழிப்பாதையின் மகிமை !! கடுமையான விரதம் இருந்து காடு மலை தாண்டி செல்லும் சபரிமலை யாத்திரை என்பது மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கக் கூடியதாக அமைகிறது .
இங்கு இருக்கக்கூடிய பல அரிய வகை மூலிகைகள் சத்துக்கள் நிரம்பிய ஓடைகள் பல நோய்களை தீர்க்கிறது இனிய காற்று இதமான சுவாசம் யாவும் சபரிமலை யாத்திரை ஒரு மருத்துவ சுற்றுலாவாக கூட அமைகிறது என்று சொல்லலாம்
பெருவழிப் பாதை
இதில் குறிப்பிட்டு பெருவழிப் பாதை என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது அடர்ந்த வனப்பகுதியாக அழகுற அமைந்த பாதை
இதுவே ஐயப்பன் தன்னுடைய யாத்திரைக்கு சென்ற வழி என்று கூட சொல்கிறார்கள் பெருவழிப்பாதையில் சென்றால் தான் ஐயப்பன் யாத்திரை பூர்த்தியாகும் பக்தர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது
இது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது இதே போல சிறிய பாதையில் பயணிப்பது ஐயப்பனை தரிசிக்க வேண்டுமானால் உதவும்
ஆனால் நிஜமான ஆத்ம திருப்தி கிடைக்க பெரிய பாதையை சிறந்ததாக அமைகிறது.பெண்கள் இதை செய்தால் தரித்திரம் உண்டாகும் இதனால் ஆபத்துகள் பல நிறைந்த போதிலும் பெரும்பாலான பக்தர்கள் இந்த வழியாகத்தான் பாதயாத்திரையாக செல்கிறார்கள் எருமேலி என்று சொல்வார்கள்.
இந்த எருமேலி அடைந்த பக்தர்கள் அங்கு தர்மசாஸ்தா ஆலயத்திற்கு முன்பு பேட்டை துள்ளி வழங்குவார்கள் அப்போது வாவரசுவாமியை வணங்கி மலை மீது ஏறி செல்ல அனுமதி பெறுவார்கள் அங்கிருந்து தொடங்கும் .
சபரிமலை யாத்திரை பேரூர் தோடு காலை கட்டி அழுதா நதி அழுத மலை பெரிய யானை வட்டம் சிறிய யானை வட்டம் போன்றவற்றை கடந்து பம்பையின் அடிவாரத்தை சென்றடைவார்கள் காலை கட்டியில் விடிவழிபாடு செய்து பக்தர்கள் வணங்குவார்கள்.
அழுத மலையில் செங்குத்தாக ஏறுவார்கள் அந்த நதியில் கற்களை எடுத்து வந்து குன்றின் மீது வீசி வழங்குவார்கள் கடந்து பெரிய யானை வட்டம் சிறிய யானை வட்டம் இவற்றை கடந்தால் பம்பை நதி குறிக்கிடும்.
இங்கு நீராடி பூஜைகள் செய்த பின்னரே ராத்திரியை தொடங்குவார்கள் இதிலிருந்து தொடhttps://youtu.be/Xj8ODHwyVvYங்குவது தான் சிறிய பாதை பயணம்.
சிறிய பாதை
சிறிய பாதை பம்பையில் நீராடி பள்ளிக்கட்டுகள் ஏந்தி தொடங்கும் இந்த சிறிய வழி பாதையில் ஆபத்துக்கள் அதிகம்
பெருவழிப் பாதையில் செல்வதுதான் சிறந்தது என்றாலும் பல மயில்களை கடந்து செல்லும் அளவுக்கு பலருக்கும் நேரம் கிடைப்பது இல்லை.
இப்போது பம்பையில் இருந்து தொடங்கி சிறிய வழி பாதையும் பலரால் விரும்பப்படுகிறது நோயாளிகள் முதியோர்கள் குழந்தைகள் போன்றவரும் இந்த பாதையை எளிதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இந்த பாதையில் தான் ஐயப்பன் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் கழுதைகள் மூலமாக கொண்டு செல்லப்படும். இப்போது கழுதைகள் குறைந்து டிராக்டர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
நீலிமலை பாதையில் அப்பாச்சி மேடு இப்பாச்சி குழிப்பகுதியை கடக்க வேண்டும் இப்படி பெருவழிப்பாதை சிறுவழிப்பாதை என அந்த ஐயப்பனை தரிசிக்க சிறிய வழி பாதையில் செல்கிறார்கள்