கோவிலில் பல்லி , கருடனுக்கு இட்ட சாபம்..

Spread the love

கோவிலில் பல்லி மற்றும் கருடனுக்கு இட்ட சாபம்….பொதுவாகவே காசி அப்டின்னு பெயர் கேள்விப்பட்டாலே நம்ம எல்லோரோட நினைவுக்கு வருவது பாவங்களைப் போக்கும் ஒரு ஸ்தலம் தான் இந்த காசி.

புனித யாத்திரைக்கு பெயர் பெற்ற ஒரு ஸ்தலம் கூட சொல்லலாம். காசியில் மரணித்தால் முக்தி என்று காலம் முடிந்த பல பேர் இங்கு வந்து மாய்ந்து போகிறார்கள்.

1785 இல் கட்டப்பட்ட இந்த கோவில் சிவஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

இந்தக் கோவிலில் உள்ள மிகப்பெரிய ஆலயமணி ஒன்று அடிக்கும்போது அதன் ஓசை பல தூரம் வரை கேட்கும்.

பூஜை நடைபெறும் சமயத்தில் நூற்றுக்கணக்கான மேளதாளங்கள் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!மற்றும் மணி ஓசைகள் எழுப்பப்படும் போதே பக்தர்கள் அனைவரும் மூழ்கி போவார்களாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் காசியில் இன்றும் சில அதிசயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொல்லலாம்.

காசி அப்படின்னு எடுத்துக்கொண்டாலே காசி மாநகரில் இயங்கும் பள்ளிகள் சப்தமிடுவதில்லை அப்படின்னு சொல்லப்படுது. பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் ,

இடத்தில் கருடன் பறந்து கொண்டிருப்பது இயல்பான ஒரு விஷயம். ஆனால் இங்கு கருடன் பரறப்ப தே கிடையாதாம்.

கோவிலில் பல்லி இதற்கு ஒரு வரலாறு இருக்குனே கூட சொல்லலாம். ஸ்ரீ ராமர் ராவணனை வென்ற பின் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்பதற்காக ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட என்றார்.

ஹனுமனை காசியிலிருந்து ஒரு லிங்கத்தை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

காசியை அடைந்த அனைவரும் வியந்து நின்றார். எங்கு பார்த்தாலும் லிங்க மயமாக இருந்தது. அதில் சுயம்புலிங்க எது எனத் தெரியாமல் விழித்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த தருவாயில் ஒரு கருட பற்றி லிங்கம் ஒன்றின்மேல் பறந்து வட்டமிட்டு கொண்டிருந்தது. அதை ஆமோதிப்பது போல் பல்லி ஒன்றும் சப்தமிட்டது. https://youtu.be/HQE4lUdXC6kசுயம்புவை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் அனுமர் அந்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து அங்கிருந்து கிளம்பினார்.

எதிர்ப்பட்ட காலபைரவர் அனுமனை தடுத்து நிறுத்தினார். காலபைரவரின் கட்டுப்பாட்டில் தான் காசி இருக்கிறது .அவர்தான் காவல் புரிகின்றார். தன் அனுமதியின்றி லிங்கத்தை எடுத்த குற்றத்தினால் கடும் கோபம் கொண்டார்.

இதனை அறிந்த தேவர்கள் அங்கு வந்து கால பைரவரை வணங்கி வேண்டி நின்று இந்த லிங்கம் உலகத்தின் நன்மைக்காக ராமேஸ்வரம் சொல்கிறது.

தயவுகூர்ந்து அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். கோபம் தணிந்த பைரவரை அனுமதி அளித்தார். ஆனால் இதற்கு காரணமாக இருந்த அந்தக் கருடன் மற்றும் பல்லியை சாபமிட்டு விட்டார்.

இனி காசியில் எங்கும் கருடன் ஆகிய நீர் பறக்க முடியாது என்றும் பல்லி ஆகிய நீர் சப்தம் இட முடியாது எனவும் சாபமிட்டு சென்றுவிட்டார். இதன்காரணமாக இன்றளவிலும் கூட காசியில் கருடன் பறப்பதில்லை.

பல்லியும் சப்தமிடுவதில்லை. இதுபோன்ற வரலாற்று அதிசய நிகழ்வுகள் இன்றும் தொடர்வதால் தான் இன்னமும் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

 678 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *