கேட்ட வரம் தரும் வெள்ளம் தாங்கி அம்மன் !
கேட்ட வரம் தரும் வெள்ளம் தாங்கி அம்மன் ! உலகப் புகழ்பெற்ற சிதம்பர நடராஜருக்கு நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் உண்டு. கிழக்கில் கீழே தெரு மாரியம்மன்,
மேற்கில் எல்லை அம்மன், வடக்கில் தில்லை காளி, தெற்கில் வெள்ளம் தாங்கி அம்மன் ஆகிய நான்கு அம்மன்கள் உள்ளனர் ஒவ்வொரு எல்லை தெய்வத்திற்கும் ஒரு வரலாறு உண்டு
இதில் வெள்ளம் தாங்கி அம்மன் குறித்த வரலாற்றை இங்கு பார்ப்போம். கோவில் வரலாறு பார்ப்போம்.
சிதம்பரம் தளத்தில் தில்லை மரங்கள் அடர்ந்து காடாக இருந்ததால் தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது.

அங்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழை ஊரே வெள்ள காடானது அப்போது வெள்ளத்தில் ஒரு பெண் அடித்து வரப்பட்டார்
அப்போது காட்டில் இருந்த யானை ஒன்று வந்து அவரை தும்பிக்கையால் தூக்கிகிருஷ்ணரை எளிமையாக வழிபடும் முறை நடராஜர் கோவிலுக்கு தெற்கு பகுதியில் உள்ள சபாநாயகர் தெருவில் சாலையோரம் வைத்துவிட்டு சென்றுவிட்டது.
தொடர்ந்து வெள்ளமும் குறைந்தது இதை பார்த்த பொதுமக்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு பெண் இல்லை.
யானையின் தும்பிக்கையின் பிடியில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை இருந்தது.
இதையடுத்து அந்த சிலைக்கு வெல்லம் தாங்கி அம்மன் என்று பெயரிட்டு பக்தர்கள் அம்பாளை வணங்கத் தொடங்கினர்.
இதன் பின்னர் தில்லை நகருக்கு அதாவது சிதம்பரத்திற்கு வெள்ளம் வருவது குறைந்து விட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கோயிலில் வெள்ளம் தாங்கி அம்மன் மேற்கு திசையை பார்த்து அருள் பாலித்து வருகிறார். யானையின் துதிக்கையோடு அரவணைத்தது போன்று அம்மன் காட்சி தருகிறார்
கேட்ட வரம் தரும் வெள்ளம் தாங்கி அம்மன் ! மேலும் கோவில் உள்ளே நுழைந்ததும் முருகன் விநாயகர் சன்னிதிகள் உள்ளன
உள்ளே சென்றதும் கருவறையில் சிவபெருமான் மற்றும் ஐயப்பன் உள்ளனர் கோவிலின் வலது புறத்தில் சிங்கத்துடன் நின்ற கோலத்தில் எல்லையம்மன் காட்சி தருகிறார்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காத்த அம்பாளுக்கு பக்தர்கள் பல்வேறு தானியங்களை படைத்து விட்டு தான் அதை சாகுபடி செய்கிறார்கள்.
அவ்வாறு செய்வதால் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தையும் மக்களையும்https://youtu.be/Cr5Jc90h-xM அன்னை காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமண ஆவதோர் என ஏராளமானோர் இ கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
அமைவிடம்; நினைத்த காரியங்களை நிறைவேற்றி கேட்ட வரங்களைத் தரும் சக்தி வெல்லம் தாங்கி அம்மனை தினசரி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம்.
இக்கோவிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.இதில் ஒன்பதாம் நாள் திருவிழாவில் வாழும் மான் ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்படும். அப்போது பக்தர்கள் சிலர் காவடி பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்
மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.