குரோதி தமிழ் புத்தாண்டு பலன் தனுசு ராசி
குரோதி தமிழ் புத்தாண்டு பலன் தனுசு ராசி மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் உங்களுக்கு கிடைக்கப் போகுது. மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெற போறீங்க.
முன்கோபம் குறையும். பேசினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க.
பணவரத்து உங்களுக்கு இந்த புத்தாண்டு முதல் அதிகரித்தே காணப்படும். மனதில் தேம்பும் உற்சாகமும் தோன்றும்.
எதிர்பாராத உதவியாளர் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்பட இந்த புத்தாண்டு அமையுது.
தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள்சபரிமலை வழிப்பாதையின் மகிமை !! நல்ல முடிவுக்கு வந்துவிடும். எதிர்பார்த்த பணம் வந்து சேர போகுது.
தொழில் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்திலும் மிக கவனமாக நீங்கள் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவங்க முன்னேற்றம் காண்பிங்க. பணவரத்து உங்களுக்கு திருப்பி தருவதாகவே இருக்கும்.
பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவங்க கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. மனதில் புது தேம்பும் உற்சாகமும் அதிகரித்துக் காணப்படும்.
மிகவும் அருமையான வருடம் எந்த ஒரு சூழலிலும் உங்களுக்கு நன்மையை நடக்க போகுது. கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகளும் உண்டாகலாம்.
காரிய தாமதமும் ஏற்படலாம். வீண் கவலை உங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நான்காக ஆலோசனை நீங்கள் செய்ய வேண்டும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மன கஷ்டமும் ஏற்படலாம். எந்த https://youtu.be/tmsW5tEpFckஒரு காரியமும் மந்தமாகவே நடக்கும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க.
எதிர்பார்க்கும் பதவி வர கூடிய ஆவணி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கப் போகுது. மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க.
எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கல்வியில் மிகப்பெரிய சாதனைகளை செய்வீங்க. எல்லாவிதமான பாக்கியங்களும் வந்து சேர போகுது.
மூலம்: இந்த வருடம் பண வரத்து அதிகரித்து காணப்படும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது உங்களுக்கு கிடைக்கப் போகுது.
திடீர் மாணவரத்தமும் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினை கூட உண்டாகலாம் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க. எல்லா நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும்.
பூராடம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறைந்தே காணப்படும். பணவரத்து சீராக இருக்கும்.
ஆர்டர்கள் வருவது உங்களுக்கு தாமதப் படலாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லது தருங்க.
சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்களும் நீங்கிவிடும்.
உத்திராடம் ஒன்றாம் பாதம்: இந்த வருடம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீங்க. உடல் ஆரோக்கியத்தில் நீங்க கவனம் செலுத்த வேண்டும்.
வேலை தவறி உணவு உண்ணும் படி நேரலாம். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க.