கார்த்திகை விரதம் இருந்தா கருணை கிடைக்கும்
கார்த்திகை விரதம் இருந்தா கருணை கிடைக்கும் “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்று சொல் வழக்கம் கேட்டிருப்போம் .
அந்த முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் தான் கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை மாசத்துல வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது.

நட்சத்திரத்தோட பெயரும் மாதத்தோட பெயரும் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் கை என்று எழுத்தில் முடியும் மாதம் இதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதமாக கருதப்படுகிறது.
இந்த கார்த்திகை மாதம் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை தான் திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும்திருச்செந்தூர் முருகன் கோவில் ! பலராலும் அடைமொழிசூட்டி அழைக்கப்படுகிறது.
ஊர்களுக்கு திரு என்று அடைமொழி சேர்ந்திருப்பது போல திருமயம், திருப்பத்தூர், திருவாடனை, திருவாவடுதுறை, திருவாரூர், திருப்புங்கூர்.போன்ற எண்ணற்ற ஸ்தலங்கள் தெரிகின்ற அடைமொழியுடன் இருப்பதை காணலாம்.
சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு திரி என்ற அடைமொழி சேர்ந்திருப்பது போல
நட்சத்திரத்திற்கும் திரியென்று சேர்த்துக் கொண்டாடுவது கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகைக்கு மட்டும்தான் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றிகளுப்போடு இருக்கும் மாதம் இது.
கார்த்திகை விரதம்

இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைப்பது வழக்கமாக இருக்கும். கந்தன் பெயரை சூட்டினால் எந்த நாளும் இனிய நாளாக அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருக்கார்த்திகை அன்று பெரியசாமி, வேலுசாமி, கந்தசாமி என்று சொல்லப்படுகிற
பெருமை வாழ்ந்த ஆறுமுக கடவுளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதால் விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை வழங்குவான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த இனிய நாள் திருக்கார்த்திகை கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிற திருக்கார்த்திகை விரதம் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் ஈட்டு தரும்.

அன்றைய தினம் முருகப் பெருமானை உள்ளம் கனிந்து உள் அன்போடு வழிபட்டால் நல்ல காரியங்கள் நடந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
அதற்கு முதல் நாள் சனிக்கிழமை அன்று பாவங்கள் போக்கும் பரணி தீப https://youtu.be/azSc5nPHlBwவழிபாட்டினையும் மேற்கொள்ளுங்கள் நல்லது
இவ்வாறு திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறு தினம் திருக்கார்த்திகை என்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.

இல்லத்து பூஜை அறையில் விநாயகர் பெருமான் படத்தோடு அருகில் முருகப் பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும்.
பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும், குழந்தை செல்வம் பெறவும் பெற்ற குழந்தைகள் கல்வி செல்வம் பெறவும் அறிவு வளரவும், செல்வ வளம் பெருகவும் ,தொழில் சிறக்கவும் இந்த விரதம் பலன் தருகிறது இந்த விரதத்தில் மூலம் தான் அருணகிரிநாதர்
சிவாலயத்திற்கு சென்று கந்தன் சன்னதியில் கை கூப்பி தொழுவது நல்லது .