காமாட்சி விளக்கை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்
காமாட்சி விளக்கை நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம் தாங்க விளக்குகளில் வட்டமுகம் இரட்டைமுகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்கள் காணப்படுதுங்க
இந்த விளக்குல அது மட்டும் இல்லாம இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இல்லங்களில் ஏற்படும் காமாட்சி விளக்கு திகழும்.
இந்த காமாட்சி விளக்கு பெரும்பாலும் பல வீடுகளில் இருக்குங்க. காமாட்சிவாடாமல்லையின் அற்புத பலன்கள் : விளக்கை ஏன் பெரும்பாலானவர்களும் பயன்படுத்துகிறார்கள்
அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைத்ததால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இனிமே நாம பார்க்கலாம்.
உலக மக்களின் நன்மைக்காகவே தவம் இருந்தவர் காமாட்சி அம்மன் அதனால் அவர் அப்படி தவம் இருந்த வேலையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கிவிட்டது
இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அது மட்டும் இல்லாமல் காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் https://youtu.be/vPxVZ2TE_wMஅடங்கும் என்பதால் ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகமாக இன்றளவும் விளக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது
காமாட்சி விளக்கை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்
ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்து காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபாடு செய்வது வழக்கத்திலும் உள்ளது.
இதனால் அவர்களுடைய வீட்டில் காமாட்சி அம்மனுடைய அருளும் அவர்களுடைய குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்பதை இன்றளவும் தெரியாமல் இருக்கும்
அவங்க எல்லாமே அப்படிப்பட்டவங்க எல்லாமே காமாட்சி அம்மனை குலதெய்வமாக நினைத்துக் கொண்டு நீயே என் குலதெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று தெய்வமே என வணங்கியபடி விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்ல நன்மையை தரும்.
அது மட்டும் இல்லாமல் காமாட்சி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் மங்களப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கு ஒன்றாக விளங்குகிறது.
காமாட்சி விளக்கு புனிதமானது இதில் கஜலட்சுமி உருவமே பொறிக்கப்பட்டிருக்கும் இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு
பூஜைக்கு முன் பூவும் பொட்டும் வைத்து மங்களத்துடன் தீபம் ஏற்றி தினமும் வழிபட்டு வந்தால் வறுமை நீங்கும் என்பது பல ஆன்றோர்களின்சான்று.
அதுமட்டுமல்லாமல் மணப்பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும் போது காமாட்சியம்மன் விளக்கும் இரண்டு குத்து விளக்குகளும் அவசியம்