கலச பூஜை வீட்டில செய்வது எப்படி?
கலச பூஜை வீட்டில செய்வது எப்படி? சுவாமிக்கு செய்யும் வழிபாட்டு பூஜை ஒரே ஒரு வார்த்தையால் சொல்லி முடித்து விடக்கூடாது. இந்த பூஜையில் பல வகைகள் இருக்கு
பூஜையன்ற வார்த்தைக்கு பல சிறப்புகள் அடங்கியிருக்கு அந்த வரிசையில இன்று நாம் பூஜை செய்யும் போது என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது
இத பத்தி தான் நாம பார்த்து தெரிஞ்சுக்க போறோம் கலச வழிபாடு செய்பவர்கள்கரும்பைத் தின்ற கல் யானை ! பொதுவாக குடும்ப நலனுக்காகவும் சகல சௌபாக்கியங்கள் பெற வேண்டும் என்பதற்காக மகாலட்சுமியே வேண்டி வழிபாடு செய்வாங்க
குடும்ப கஷ்டங்கள் நீங்கி வறுமையில்லாமல் தன தானியம் பெருக செய்யக்கூடிய இந்த எளிய வழிபாடு நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்திருக்காங்க
காலப்போக்கில் இதை எப்படி முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பது பலரும் தெரியாமல் போய்விட்டது .
எளிய மக்களும் செய்யக்கூடிய இந்த சக்தி வாய்ந்த கலச வழிபாடு அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு வரவளிக்கும் ஒரு அற்புத வழிபாடு .இந்த வழிபாட்டை எளிதாக முறையில நாம் மேற்கொள்ள வேண்டும்
அஷ்டலட்சுமிகளையும் அலைக்கும் இந்த கலச வழிபாடு செய்வதற்கு முதலில் ஒரு கலசத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் .
கலச பூஜை வீட்டு பூஜைக்கி பயன்படுத்தப்படும் பித்தளை செம்பு அல்லது வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன கலசம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது எதுவும் இல்லை என்றால் நீங்கள் மண் கலசத்த பயன்படுத்தலாம்
இதை தவிர்த்து வேறு எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த வேண்டாம் உலோகங்களுக்கு ஒவ்வொரு விதமான அதிர்வகைகளை உண்டு பண்ணும் சக்தி இருக்கு இந்த அதிர்வலைகளை தெய்வீக ஆற்றல் எடுத்துக் கொடுக்கும் .
முதல்ல கலசத்த நன்கு சுத்தம் செய்து வெளிப்பகுதி முழுவதுமே மஞ்சள்https://youtu.be/YGFFCiSthrc குழைத்து தடவிக்கொள்ள வேண்டும் பின்னர் ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுற்றிலும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்
அதன் பிறகு கலசத்திற்குள் உங்களிடம் கங்கை தீர்த்தம் இருந்தால் ,கால் பாகம் அளவிற்கு விட்டுக் கொள்ளுங்கள் மீதம் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
கங்கை தீர்த்தம் இல்லாதவர்கள் பன்னீர் அல்லது சாதாரண தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம்
பின்னர் அதனுள் சேர்க்க வேண்டிய முக்கியமான பொருட்கள் மூன்று இருக்கு
பண வரவை இருக்கக்கூடிய அதிக சக்தி படைத்த பச்சை கற்பூரம் பச்சை கற்பூரம் தெய்வீக உணர்வை நமக்குள் ஏற்படுத்தும்
பின்னர் அதனுடன் வாசனை மிகுந்த ஏலக்காய் மற்றும் கிராம்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
பின் மங்களப் பொருட்களான மஞ்சள் குங்குமத்தை உங்கள் கையால் எடுத்து கொஞ்சமாக தூவிக் கொள்ளுங்கள்
மஞ்சள் குங்குமத்தை அதிகம் சேர்க்கக்கூடாது. சிட்டிகை அளவுக்கு சேர்த்தால் போதும்.
பின்னர் அதனுடன் தானியங்கள் பெருக அன்னபூரணியின் அம்சமாக விளங்கும் பச்சரிசியை கொஞ்சமாக கையில் எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்
மறுமை இல்லாத வாழ்வு நிலைத்திருக்க கட்டாயம் பச்சரிசி சேர்க்க வேண்டும் பின் கலசத்திற்குள் வாசனை மிகுந்த பூக்களை வைக்க வேண்டும்