ஒரே கல்லில் செதுக்கிய ஏழு தலை நாகம்!
ஒரே கல்லில் செதுக்கிய ஏழு தலை நாகம்! இன்றும் காணப்படும் சீதையின் காலடித்தடம்!
இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த கோவில் எங்கு உள்ளது தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது லேபாக்ஷி என்ற சிறிய கிராமம்.
பெங்களூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. மார்கழியில் காணக்கூடிய அதிசய மரகதலிங்கம் !! இன்றும் அறியப் படாத மர்ம தகவல் !இந்தக் கோவில் அகத்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்லப்பட்டாலும் இந்தக் கோவிலுக்கும் புராணக்கதை இராமாயண இதிகாசப் திற்கு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
ராமனும் சீதையும் வனவாசம் சென்றபோது சீதையை கடத்திச் சென்றான் ராவணன். ராமனையும் லக்ஷ்மணனையும் திசை திருப்பிவிட்டு சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான் ராவணன்.
அதே சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற கழுகு ராவணனிடம் போரிட்டது.
அதில் தோல்வியுற்றா ஜடாயுவிற்கு காயம் ஏற்பட தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும் லக்ஷ்மணனும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் ஜடாயு பறவை மோக்ஷத்தை வேண்டியது. ராமனோ எழுந்திரு பறவையே என்றார். இத்தகைய புராண நிகழ்வு இந்த ஊரில் நடந்ததால் இந்த ஊருக்கு லேபாக்ஷி என்ற பெயர் வந்ததாக செவிவழிக் கதைகள் சொல்லப்படுகிறது.
லேபாக்ஷி என்றால் தெலுங்கு மொழியில் எழுந்திரு பறவையே என்பது பொருள். லே ஏனென்றால் எழுந்திரு என்றும் பக்ஷி என்றால் பறவை என்றும் அர்த்தம்.
விஜயநகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக இந்த கோவில் விளங்குகிறது.
இங்கு சிவன் விஷ்ணு மற்றும் வீரபத்திர ஸ்வாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் function கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்தக் கோவில் முழுவதும் கிரானைட் பாறையால் கட்டப்பட்டது. ஒரே கல்லில் செதுக்கிய ஏழு தலை நாகம்! இந்தக் கோவிலில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.
பல தூண்களுடன் கூடிய நாட்டிய மண்டபமும் கர்ப்பகிரகம் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் ஏழு தலை நாகத்துடன் கூடிய சிவலிங்கம் கம்பீரமாக காட்சி கொடுக்கிறது.
இந்த சிலை கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி தன்னுடைய தாய் மதியவேளை உணவு சமைப்பதற்குள் இந்தப் பிள்ளையை செதுக்கினார் என்ற தகவல்கள் காணப்படுகிறது.
மேலும் இந்த சிலையானது ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உள்ளது. இங்கு ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும் சீதா தேவியின் பாதம்பட்ட இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
சீதா தேவியின் கால் பட்ட இடத்தில் எப்போதும் வற்றாமல் நீர் கசிந்து கொண்டுள்ளது.
இங்கு இராமாயணக் காட்சிகள் குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு காணப்படுகிறது.
இந்தக் கோவிலானது கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஆமை வடிவம் மலையில் அமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர ஸ்வாமி கோவிலில் காணப்படும் மிக பிரம்மாண்டமாக காட்சி கொடுக்கிறது.
இந்தியாவில் காட்சி கொடுக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கோவிலில் சிவபெருமானின் 14 வடிவங்கள் காணப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.
358 total views, 1 views today