ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம்
ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கிரகண நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வாகும்
சூரியன் சந்திரன் கிரகணம் நிகழும் போது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது
ஐப்பசி பௌர்ணமி
இந்த ஆண்டிற்கான கடைசி சத்திர கிரகணம் வரும் 28ஆம் தேதி நள்ளிரவில் நிகழ உள்ளது
ராகு கிரகஸ்தம் சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் 28ஆம் தேதி நிகழ உள்ளது
மேஷ ராசியில் குரு ராகு சந்திரன் இணைந்து இருக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது சந்திரன் மட்டுமல்லாமல்
குரு பகவானும் சில மணி நேரங்களில் கிரகணத்தின் பிடியில் சிக்குகிறார்
இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இங்கு தோசை காலம் கடைபிடிக்கப்படுகிறது
எனவே கிரகணம் நிகழும் நேரத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தை ஒட்டி எட்டு மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது
அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு
அக்டோபர் 29 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் 29ஆம் தேதி அதிகாலை 1 :05 மணிக்கு முதல் 2:2 2மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும்
எனவே 28ஆம் தேதி இரவு 7 5 மணிக்கு ஏழுமலையான் கோவில் கதவு மூடப்படும் கிரகண நேரத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ஆம் தேதி அதிகாலை 3 15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை சுப்ரபாத சேவை நடைபெறும்
எனவே சந்திர கிரகணத்தை ஒட்டி கோவில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்படும்
இதன் காரணமாக 28ஆம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மாற்றுத்திறனாளிகளில் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்
கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறு கால பூஜை நடைபெறும் சஷ்டி மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நிகழும் நாட்களின் போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோயில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது