ஏழுமலையான் சிலையில் மறைந்திருக்கும் ரகசியம்!
ஏழுமலையான் சிலையில் மறைந்திருக்கும் ரகசியம்! திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் இருக்குது. உலகத்திலேயே இந்த பாறைகள் எங்கு மட்டும்தான் இருக்குதுங்க.
இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானவையாக இருக்கும்.
எந்த கருங்கல் சிலையானாலும் கூட எங்காவது ஓரிடத்தில சிற்பியின் உளி பட்டு இருக்கும் இடம் தெரியுங்க.
உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்தை இடம் தெரியுங்க. ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை இது ஒரு அற்புதமான அதிசயம்.
எந்த கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். மேஷம் வைகாசி மாத ராசி பலன் !ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது
போலவே இருக்குமங்க.
ஏழுமலையான் சிலைகளில் நெற்றிச்சுட்டி, காதணிகள், உருவங்கள், நாகா பரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஸ் போட்டது போல பளபளப்பாகவே இருக்கும்.
ஏழுமலையான் திருவுருவ சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துறாங்க.
இந்த பச்சை கற்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பை கொடுக்கும் ஒருவகை அமிலமும் கூட.
இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கலில் தடவினால் கருங்கல் ஆனது வெடித்து விடும் அபாயம் கொண்டதுங்க.
ஆனால் சில தோரணத்தில் உள்ள பாறைகளில் இதை தடவினால் அந்த பாறைகள் வெடிப்பது கிடையாது.
ஏழுமலையான் திருவுருவ சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவுறாங்க.https://youtu.be/1v_OVNQbxMs ஆனாலும் வெடிப்பு ஏற்படுவது கிடையாது.
இது என்ன ஒரு அதிசயம். ஏழுமலையான் திருகுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கும்.
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசமாக கருதப்படுது. அப்படி இருக்கையில அதிகாலை நான்கு முப்பது மணிக்கு குளிர்ந்த நீர் பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகமும் செய்யறாங்க.
அதிகாலை நான்கு முப்பது மணிக்கு குளிர்ந்த நீர் பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்தும்
ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கவும் செய்யுதுங்க. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறாங்க.
வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாகவே கொதிக்கும்.
திருப்பதி ஆலயம் அதன் வழிபாடு உண்டியல் வசூல் பூஜை முறைகள் சரித்திர சம்பவங்கள் அனைத்துமே அதிசய நிகழ்வுகளாகவே இருக்குதுங்க.
திருப்பதி திருக்கோவில் சமையல் கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல் தயிர் சாதம், புளி சாதம் சித்ரான்னம், வடை, முறுக்கு ஜிலேபி அதிரசம் போளி அப்பளம் மௌ காரம் லட்டு பாயாசம் தோசை ரவா கேசரி பாதாம் கேசரி முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுதுங்க.
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குறாங்க. இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில்ல கர்ப்ப கிரகத்திற்கு குலசேகரபடியை தாண்டாதுங்க.
இது மேல் சாத்து வஸ்திரம் பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் நாம காத்திருக்க வேண்டும்.
37 total views, 1 views today