எட்டு மாரியம்மன் கட்டிக் காக்கும் கோட்டை மாரியம்மன்!
எட்டு மாரியம்மன் கட்டிக் காக்கும் கோட்டை மாரியம்மன்! கோட்டை பிறக்கையிலேகூடப்பிறந்த பெரிய மாரி!சேலம் பிறக்கையிலே சேர்த்து பிறந்த பெரிய மாரி அப்படின்னு சொல்லுவாங்க!
அப்படிப்பட்ட உன்னத பெருமை வாய்ந்த தாய் தான்! கோட்டை மாரியம்மன்இவளுடைய சக்தி அளவிட முடியாதது!
சேலம் பழைய பேருந்து ஒட்டி அமைந்திருக்கக் கூடிய இடம்தான் கோட்டை மாரியம்மன்!
மக்களின் குறைகளை அனைத்தும் தீர்க்கக்கூடிய சர்வ வல்லமை கொண்ட சக்தியாக திகழ்ந்து வருகிறாள் அது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள பிணிகளை தீர்த்தருளும் தெய்வம்! எட்டு மாரியம்மன் கோவில் முதன்மையானவள் இவள்!
மாபெரும் சக்தி கொண்டிருப்பவள்! எட்டு பேட்டைகளையும் கட்டியாலும் தாய்! எட்டு மாரியம்மன் கோவில் சேலம் மாநகரை ஆட்சி செய்கிறார்கள்
அந்த எட்டு மாரியம்மன் கோவில் பெரியவள் தான் இந்த கோட்டை மாரி எட்டு பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்!மாரியம்மன் கோவில் பூச்சாட்டுகள் நிகழ்வுக்கும் இங்கிருந்து தான் பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விழாவில் தொடங்கப்படும்!
மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இந்த சேலம் கோட்டை மாரியம்மன் திகழ்ந்து வருகிறார்!
ஆங்கிலேயர் வாழ்ந்த காலத்திலேயே இந்த பகுதியில் கோட்டை மாரியம்மன் இங்க இருக்கக்கூடிய பெருமாள் கோவிலும் பழமையானது!
எட்டு மாரியம்மன் கட்டிக் காக்கும் கோட்டை மாரியம்மன்! அந்த காலத்திலேயே ஆங்கிலேயருக்கு காவலாக நின்றவள்! இன்று அளவிலும் மக்களின் காவல் தெய்வமாக இருந்து வருகிறாள் அதுவும் சேலம் மாநகரை காக்கிற காவல் தெய்வம்!
சேலம் மாநகரில் இருக்கிற இந்த பெரிய மாரி பார்ப்பதற்கு அற்புத காட்சியாக அழகு மயில் ஓவியமாக திகழ்பவள் இவள் தலையில் கிரீடம் வெகு சிறப்பாக அமைந்திருக்கும்!
அன்னையின் சிரசில் இருக்கிற ஜீவால கீரிடம்அக்னி கிரீடமாக வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது!
ஒளி வீசக்கூடிய அந்த கிரீடத்தில் நாக படம் எடுப்பது போன்ற காட்சி அற்புதமானது!https://youtu.be/0ZprS41kZxE நான்கு கரங்களுடன் அன்னை விளக்குகிறாள்
வலது கரத்தில் நாகப்பட்டினம் இடது கரத்தில்அங்குசம் மேல் கரத்தில் அமுத கிண்ணம் அதேபோல வலது புற மேற்கரத்தில் உடுக்கை அமைந்திருக்கிறாள்!
அன்னை வலது காலை தொங்க விட்டபடி இடது காலை மடித்து வைத்தபடியோகாசன பீடத்தில் அமர்ந்திருக்கிறாள்!
ஈசான மூலையில் அமர்ந்தபடி ஆனந்த உருவமாய் அமைதி கொண்ட சொரூபமாய் பேரருள் புரிகின்ற இரட்சிக்கும் தாயானவள் காத்து நிற்கிறாள்!
ஆரம்பத்தில் இந்த அன்னையின் கோவில் சிறிய கருவறையுடன் காட்சி தந்தது ஆனால் தற்போது பெரிய கருவறையுடன் கம்பீரமாக காட்சி தருகிறார்!
இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு தன் பிள்ளையாகவே பாவித்து வாழ்க்கையில் உன்னது உயர்வை அடைய செய்கிறார் இந்த அன்னை அது மட்டும் இல்லாமல் மக்களின் உடல் நிலையில் இருக்கிற பிணிகளை போக்கித் தருகிறார்!
எல்லா நாட்களும் கோட்டை மாரியம்மன் க்கு சிறப்பு தான் ஆனால் ஆடி மாதம் என்றாலே கோட்டை மாரியம்மன் உரியதாகவே ஆகிவிடுகிறது வருகிற ஆடி மாதங்களில் கோட்டை மாரியம்மன் விழா என்பது வெகு விமர்சையாக சேலம் மாணவர்கள் நடக்கும்!