ஊர் எல்லையை காக்கும் காட்டேரி அம்மன்!

Spread the love

  • ஊர் எல்லையை காக்கும் காட்டேரி அம்மன்! சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் விசித்திரமான நாடகம்தான் இந்தக் காட்டேரி அம்மனின் வரலாறு.
  • ஒருநாள் இரவு எப்பொழுதும் போல சிவபெருமான் உறங்கச் சென்றுவிட்டார். ஆனால் பார்வதி தேவி எப்பொழுதும் போல் உறங்காமல் சிவபெருமான் தூங்கிய பிறகு நடுஇரவில் கிளம்புவது போல் பார்வதி கிளம்பிவிட்டாள்.
  • அன்று எதர்ச்சியாக சிவபெருமான் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார். தன் அருகில் படுத்திருந்த பார்வதி தேவியை காணாமல் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். தேடிப் பார்த்துவிட்டு பரமசிவனும் உறங்கிப் போனார்.
  • தன் வேலை எல்லாம் முடித்துக்கொண்டு பார்வதி எதுவும் தெரியாததைப் போல் பரமசிவன் பக்கத்தில் வந்து படுத்து உறங்கிப் போனாள்.
  • சிவபெருமானுக்கு கோபம் வந்தது. இரவில் நான் எழுந்து பார்த்த பொழுது உன்னை காணவில்லை நீ என்னிடம் பொய் சொல்கிறாய் என்று கோபமாக பார்வதி தேவியை நோக்கி சொன்னார்.
  • அதற்கு பார்வதிதேவி சிரித்துக்கொண்டே அதுவா எனக்கு உறக்கம் வரவில்லை அதனால் நான் சற்று வெளியில் சென்று வந்தேன் என்று பதில் சொன்னார்.
  • அதற்கும் மேல் பரமசிவன் பார்வதி தேவியிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.
  • மறுநாள் இரவு பரமசிவனுக்கு தூக்கம் வரவில்லை நடு இரவில் பார்வதி websiteதேவி தன்னுடைய வேலைக்கு எப்பொழுதும் போல் கிளம்பி விட்டார்.
  • தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதிதேவி புறப்படுவதை தெரிந்துகொண்டு அவளுக்கு தெரியாமல் பார்வதி தேவி பின்னால் உளவு பார்த்தார்.
  • ஊர் எல்லையை காக்கும் காட்டேரி அம்மன்! சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் விசித்திரமான நாடகம்தான் இந்தக் காட்டேரி அம்மனின் வரலாறு. பார்வதிதேவி நேராக சுடுகாட்டிற்குச் சென்று விகாரமான உருவம் எடுத்து புதைத்து வைத்திருந்த பிணங்களை தோண்டி எடுத்து கடித்து சாப்பிட்டால்.
  • எரியும் பிணங்களை பிடுங்கித் தின்றாள். இதை பார்த்த பரமசிவன் பேரதிர்ச்சி அடைந்தார். 
  • தினமும் இப்படித்தான் இரவு நேரங்களில் தனக்குத் தெரியாமல் இங்கு வந்து பிணங்களை உண்டு வருகிறாள் என்று உறுதி செய்துகொண்ட பரமசிவன் கைலாயத்திற்கு திரும்பிவிட்டார்.
  • அன்று காலை அவர் எதுவுமே நடக்காதது போல பார்வதிதேவியிடமும் எதுவும் கேட்காமல் இயல்பாக இருந்து விட்டார். பார்வதி செய்யக்கூடிய இந்த செயலை முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய பரமசிவன் ஒரு திட்டம் போட்டார்.
  • பகல் வேளையில் நேராக சுடுகாட்டிற்கு போகக்கூடிய அந்தப் பாதையில் மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் ஒரு குழியை வெட்டினார்.
  • அந்தக் குழி வெளியில் தெரியாமல் இருக்க இலை தழைகளை போட்டு அதன் மேல் புல் போட்டு மூடிவிட்டார். நள்ளிரவு நேரமும் வந்தது.
  • எப்பொழுதும்போல் பார்வதிதேவி புறப்பட்டாள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *