ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் !
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ! மாதத்தில் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுவது எந்த மாதம் என்றால் அது ஆடி மாதம் இது தெய்வ வழிபாட்டிற்குரிய மாதமாக விளங்குகிறது.
தட்சிணாயணம் உத்திராயணம் ஆகியவை கூடும் மாதம் என்பதால் இந்த மாதம் தெய்வங்களுக்கு மட்டுமல்லாமல்
நமது முன்னோர்களை வழிபட்டு தர்மகர்ம காரியங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்கிறது.
ஆடி மாதம் வெற்றியையும் சுபிட்சத்தையும் தரும் மாதமாக விளங்குகிறது .தெய்வ வழிபாட்டிற்கும் விரதம் நேர்த்திக்கடன் செய்வதற்கும் உரிய மாதமாக திகழ்கிறது.
பொதுவாக எல்லோருக்கும் ஆடி மாதத்தின் சிறப்புகள் தெரியும் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ! அதேபோல் என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பலருக்குமே தெரியாது .எவற்றை தவிர்க்க வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆடி மாதம் இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது இந்த மாதத்தில்ஆதிசங்கரர் அமைத்த சிறுங்கேரி சாரதாம்பாள் ஆலயம்! குலதெய்வ வழிபாடு, கிராம தேவதை வழிபாடு ,இஷ்ட தெய்வ வழிபாடு ,
சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு ,மகாலட்சுமி வழிபாடு, என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக இந்த ஆடி மாதம் உள்ளது.
பெண் மாதமான ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்திற்கு அதிபதியான சந்திரன் திகழ்கிறார்.அதனால் இந்த மாதத்தில் இறைவழிபாடு என்பதும் மந்திர ஜபம் போன்றவை செய்வதும் மிகவும் சிறப்பானதாக அமையும்
இந்த மாதத்தில் எந்த முறை வேண்டுமானாலும் இதை வழிபாட்டினை செய்யலாம் எப்படி செய்தால் அது பல மடங்காக அதிக பலனை தரும் என்பதை பார்க்கலாம்
ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்தெந்த காரியங்களை செய்யலாம் எந்த காரியத்தை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது .புது https://youtu.be/NLJn9Q3lU3Yவீடு குடி புகுதல் வீடு அல்லது இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது .ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கவே கூடாது .ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் .
திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம், தாலி பெருக்கி போடலாம். மந்திர ஜபம் போன்றவை யாகம் போன்றவை செய்யலாம் ஆடி மாதம் வாஸ்து புருஷன் நித்திரை விடும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் வீடு கட்டமான பணிகளை துவங்கலாம்.
அதுமட்டுமில்லாமல் ஆடிப்பெருக்கு அன்றைக்கு புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன் பணம் கொடுக்கலாம் குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருங்கள் பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் பெற முடியும்