ஆடி மாதத்தின் சிறப்பு அம்சங்கள் !
ஆடி மாதத்தின் சிறப்பு அம்சங்கள் ! ஆடி பிறந்த உடனேயே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடுகின்றன. ஆடிமாதம் பிறந்ததும் தட்சணாயணம் ஆரம்பிக்கிறது. ஆடி முதல் மார்கழி வரை இந்த காலம் நிலவும். சூரியன் தெற்கு பக்கமாக வலம் வருவார்.
நாம் இந்த புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது ரொம்பவும் விசேஷமாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை கணக்கில் வைத்து தான் நமது முன்னோர்கள் பண்டிகைகளின் தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மாதம் முழுவதுமே கிராமப்புறங்களில் உள்ள காவல் தெய்வத்திற்கு சிறப்பான பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசுத்திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
ஆறு மக்களின் ஜீவநாடியாக இருப்பதினால் ஆடி மாதம் புதுநீர் வருவதை கொண்டாடுவதே மக்கள் பல நூறு ஆண்டுகளாக மரபாக வைத்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி தாயாரின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
தமிழ் மாதத்தில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவு அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் என்பது நடைபெறும்.
ஆடி அமாவாசை அன்று நமது மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளைமிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் பித்ருகளுக்கு கடன் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும்.
ஆடிப் பவுர்மி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளால் கதம்ப சாதத்தை படைக்கும் படையல் பல கோவில்களில் வெகு விமர்சையாக நடக்கும்.
ஆடி மாதம் திறக்காத அம்மன் கோவில்களும் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும்.
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சைப்பழ விளக்கு ஏற்று வழிபாடுhttps://youtu.be/jU8KxZC9q0w செய்வதன் மூலம் கூடுதல் பலன்கள் கிடைக்க பெறும் ஆனால் எலுமிச்சை பழ விளக்கை விளக்குகளை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது.
ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறும்
ஆடி மாதம் முழுவதும் மீனாட்சி தாயாரை வழிபட்டு வருவதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலை ஏற்படும்.ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் காமாட்சி தயாரை வணங்கி வருவதன் மூலம் திருமண தடைகள் விலகி திருமண பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வருவதன் மூலம் செல்வநிலை மேலும் பெருகும். ஆடி மாதத்தில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்காரம் செய்து வழிபட்டால் கூடுதல் பலன் பெற முடியும்
ஆடி மாதம் அம்மனை ஆவணம் செய்து பாயாசம் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
ஆடிப்பூரம் பூஜை அம்மன் கோவில்களில் விமர்சையாக நடக்கும் அப்போது கோவிலில் தரப்படும்
வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சபைகள் நலன்களையும் பெற முடியும் என்பது ஐதீகம்.