ஆஞ்சநேயர் வழிபாடு
ஆஞ்சநேயர் வழிபாடு ராமாயணத்துல இணையற்ற இடத்தை பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு உடல் வலிமை துணிச்சல் புகழ் ஆரோக்கிய வாக்கு சாதுரியம் வீரமாகிய அனைத்து ஒருங்கே அமையப்பெற்றவர் தான் ஆஞ்சநேயர்.
அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தி ஆகவும் கொண்டாடப்படுகிறது. வாய் தேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
புதன் வியாழன் சாணி மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.

ஆஞ்சநேயரை பலவிதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நாம் முன்னோர்களின் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது.
ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராம நாத வழிபாடு.
இந்த முறையில ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிகவும் நல்ல பலன்களை தரக்கூடியதா அமையும்.
புராண கதைகள் படி சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயம் தாங்க. ஓம் என்ற சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு!அதனால ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால் சனியின் தாக்கங்கள் சற்று குறையும் எனவும் நம்பப்படுது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்றாருங்க.
ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டமும் நாம படிக்க வேண்டும். சில ஆலயங்கள் எல்லாம்
மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார்.
அதற்கு காரணம் அந்த இறை மூர்த்தம் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம்https://youtu.be/AUnJ0i38Ivs வழங்கும் அருள் கடலாக திகழ்வார்.
அந்த சன்னதி அமையப்பெற்றதன் பின்னணியில உள்ள புராண நிகழ்வு கூட மக்களை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாகவே இருக்கலாம்.
அந்த வகையில வைணவ தளங்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மக்கள் மிகவும் விரும்பி வழிபாடு செய்யும் சன்னதியாக திகழுதுங்க.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் புகழப்படுகிறார். சர்வ மங்கள காரியானு கூலம் என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனை குறிப்பிடுவாங்க.
அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஐதீகமாக கருதப்படுது.
அவர் வாயுவின் புத்திரர் என்பதால் அவர் காற்றோடு காற்றாக கலந்து எங்கும் நிறைந்து நம்மை காப்பதாக நம்பப்படுது.
பலவித தோற்றங்களில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் தளம் மூர்த்தி தீர்த்தம் என்று மூன்று வகைகளிலும்

வர பிரசாதமாக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்தவர் ஆஞ்சநேயர்.
மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது அவருக்கு சேவை செய்வதை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு ஆஞ்சநேயர் வாழ்ந்து வந்தார்.