ஆஞ்சநேயரை இப்படி வழிபட்டு பாருங்கள்:
ஆஞ்சநேயரை இப்படி வழிபடுவதால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் நோய்கள் தீரும் பயம் விலகவும்.
தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபட்டு நலமுடன் வாழ உதவும் ஒரே கடவுள் ஆஞ்சநேயர் மட்டும்தான்.
தல மூர்த்தி தீர்த்தம் என மூன்று வகையிலும் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் கூடியவர் ஆஞ்சநேயர்.
ராம சேவை ராம பக்தியே உயிர் மூச்சாக கொண்டு வாழக்கூடியவர் நம் anjaneyar valipaduஆஞ்சநேயர் அதனால் இவரை முறையாக வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் நமது வாழ்க்கையில் ஏற்படும்.
ராம பக்திக்கு சேவைக்கு எடுத்துக்காட்டாக திகழும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் ருத்ர அவதாரமாக கருதப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் திருமால் ராமராக அவதாரம் எடுத்தபோது அதில் தாங்களும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் ராமசேவையில் தங்களின் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
என அனைத்து தெய்வங்களும் தெய்வங்களும் விரும்பி இருக்கின்றனர் இதன்படி மகாவிஷ்ணு ராமன் ஆகவும் மகாலட்சுமி சீதாவாகவும் ஆதிசேஷன் லட்சுமணன் அவதரித்துள்ளனர்.
இதனால்தான் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும் பெருமாளையும்https://youtu.be/VsN2j9ubzn0 சேர்த்து வழிபட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கையாக உள்ளது.
ராம் அவதாரம் முடிந்து திருமால் வைகுண்டம் திரும்பும் போது ஆஞ்சநேயரின் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை தருவதாக திருமாலை கூறியும் அதை மறுத்துவிட்டார் ஆஞ்சநேயர் ஏனென்றால் எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் எழுந்தருளி ராமசேவை தொடரப் போவதாக ஆஞ்சநேயர் கூறியுள்ளார்.
ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு உரிய நாளாக சனிக்கிழமை கருதப்பட்டு வருகிறது. சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து வாய்ப்பாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
விரதம் இருக்கும் நாளில் ஒருவேளை மட்டும் உணவு உண்ண வேண்டும் உணவில் உப்பு காரம் என்னை சேர்க்காமல் உணவு உண்ண வேண்டும்.
பகல் முழுவதும் வீட்டில் இருந்து ராம நாமம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெய ஜெய ராமா ஆகிய மந்திரம் அனுமன் கவசம் அனுமன் சாலிசா போன்றவை பாராயணம் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
மாலை நேரத்தில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதால் நன்மை உண்டாகும்.
விரதம் முடிந்ததும் மறுநாள் காலை நீராடி பூஜை செய்து, நெய்வேத்தியம் படைத்து விரதத்தை நிறைவு செய்தால் நன்மை உண்டாகும்.
வெண்ணெய் காப்பு அனுமனுக்கு வெண்ணை காப்பு சாட்சி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகொடும் என்பது நம்பிக்கை.
வெற்றிலை மாலை சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சாற்றி அனுமன் கவசம் படித்தால் எதிரிகளால் ஏற்படும். பயன்கள் நீங்கும் தடைபட்ட காரியங்கள் விரைவில் நடக்கும்.
துளசி மாலை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாட்சி வழிபட்டால் சனீஸ்வரன் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட ஆஞ்சநேயர் உதவி செய்வார்.