அமாவாசையில் காகங்களுக்கு உணவு !
அமாவாசையில் காகங்களுக்கு உணவு ! அமாவாசை நாட்களில் மட்டும் தான் காகங்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று கிடையாது
பொதுவாகவே காகங்களுக்கு மற்ற சாதாரண நாட்களில் கூட உணவளித்து வந்தோம் என்றாலே அது நமக்கு ஒரு மிகப்பெரிய புண்ணிய பலனை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம்
பொதுவாக நம் வீடுகளில் இப்படி உணவு வைத்து நாம் வழிபடும் போது முன்னோர்களுடைய ஆசை பரிபூரணமாக கிடைக்கிறது என்பது மட்டும் அல்லாமல் சனிபகவானுடைய ஆசையும் நமக்கு கிடைக்கிறது என்றே சொல்லப்படுகிறது
அது மட்டுமில்லாமல் எப்படி நாய்களுக்கு உணவளித்தால் காலபைரவருடைய அனுகிரகம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
அதேபோலத்தான் காகங்களுக்கும் உணவு வைப்பது இறந்து போன முன்னோர்கள் கடன் சுமை குறைய செய்ய வேண்டியவை !காகங்களுடைய வடிவில் நம் வீடு தேடி வருவார்கள் என்று மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது

அமாவாசையில் காகங்களுக்கு அந்த வகையில் தான் அவர்களுடைய ஆசீர்வாதம் பெறுவதற்காக அவர்களுக்கு உணவு அளிக்கிறோம்.
அந்த வகையில் நம் முன்னோர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதித்தால் நம்மளுடைய சந்ததியையே சிறப்பாக வாழும் என்று சொல்லலாம்
அந்த வகையில் அமாவாசை தினத்தில் காகங்களுக்கு உணவு விடுவதன் மூலமாக பித்துருக்களின் ஆசையை பெற முடியும்
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும்.
எமனையின் தூதுவனான காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் சொல்கிறது.
அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் உணவு வைக்கும் போது செய்யக்கூடாத தவறாக என்ன சொல்லப்படுகிறது

என்றால் கண்டிப்பாக அவங்களுக்கு அசைவ உணவுகளை வைக்கக் கூடாது அது மட்டுமல்லாமல் குளிக்காமல் உணவை வைக்க கூடாது அது பாவத்தை உண்டு பண்ணும் என்றே சொல்லப்படுகிறது
இதனால் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது முன்னோர்கள் இறந்த https://youtu.be/soWtPFFNlxYதேதி ஆடி அமாவாசை தை அமாவாசை மகள்ய அமாவாசை இந்த
வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது அன்று காகத்திற்கு சாதம் வைத்து காகம் சாப்பிட்ட பின்னரே நாம் சாப்பிட்டோம்
என்றால் அது மிகவும் புண்ணியம் இதுவே காலகாலமாக கடைபிடித்து வரக்கூடிய விஷயமாக இருக்கிறது
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் பொழுது நிஜமாகவே பித்துக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை
குறிப்பாக சனிக்கிழமை அமாவாசையும் சேர்ந்து வரக்கூடிய நாட்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இப்படியாக முன்னோர்களின் வடிவமாகவே காகங்கள் பார்க்கப்படுகிறது
குறிப்பாக அமாவாசை நாட்களில் ஆற்றங்கரை குளக்கரையில் முன்னோர்களுக்கு உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம்
அதுவே நன்மையை கொடுக்கும் அப்படியே கொடுக்க முடியாதவர்கள் வீடுகளிலேயே எள்ளும் தண்ணீரும் காகங்களுக்கு கொடுப்பதால் அது பித்துருக்களுக்கு செய்த பரிகாரமாக அமைகிறது
பித்ரு உடைய கடனை மட்டும் எப்போதும் நிறுத்தாமல் செய்வதே நமது கடமை அப்படி செய்தாலே அனைத்து தெய்வங்களுடைய அருளும் நமக்கு கிடைக்கும் என்று சொல்லலாம்
எந்த ஒரு கடமையும் தள்ளிப் போடலாம் முன்னோர்களுக்கான கடமையை தள்ளிப் போடவே கூடாது