வீட்டில் பல்லி இருப்பது நல்லதா ?கெட்டதா?
வீட்டில் பல்லி இருப்பது நல்லதா ?கெட்டதா? பல்லியைப் பார்த்து நல்ல சகுனம் என்று சில பேர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.
சத்தமிட்டால் கெட்ட சகுனம் என்றும் வேறு சிலர் நல்ல சகுனம் என்றும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்
பல்லி வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதனை விரிவாக பார்க்கலாம். வீட்டில் கரப்பான் பூச்சி வண்டு தும்பி பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது
ஆனால் சிலருக்கு வீட்டில் இருப்பது பிடிப்பதில்லை ஏனெனில் கரப்பான் பூச்சி மனிதர்களுக்கு பலவிதமான தொற்று நோய்களை ஏற்படுகிறது
இன்னும் சிலருக்கு வீட்டுக்குள் பல்லி இருப்பது பிடிக்காது இதை அடித்து வெளியில் துரத்தாமல் அவர்கள் வீட்ட விட்டுவிடுவார்கள்
ஒரு சிலர் வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபப்பட்டு விட்டு விடுவதும் உண்டு
இவை பெரும்பாலும் வீட்டு சுவர்கள் மூளைகளில் காணப்படும் ஒரு பூச்சி யாரையும் தொந்தரவு செய்வதில்லை இத்தகைய பல்லிகளை குறித்து ஜோதிடத்தில் அதிக அளவு கூறப்பட்டுள்ளது
அந்த வகையில் பல்லியை பார்ப்பது நல்ல சகுனம் என்றும் சிலர் கெட்ட சகுனம் என்றும் சிலர் கூறுகின்றன.
பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என்பதனை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பல்லி களை கண்டாலே பெரும்பாலோனார் பயப்படுவார்கள் அவற்றை பார்த்த உடனே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்வார்கள்
ஆனால் ஜோதிட நம்பிக்கையின்படி பல்லி பண விஷயங்களில் மங்களகரமாக கருதப்படுகிறது அதாவது பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது எனவும் சொல்லப்படுகிறது
சில மாநிலங்களில் புதிய வீட்டில் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு.
பல்லி வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது அதற்கான காரணமும் ஆகும்.
இவ்வளவு ஏன் தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோவிலே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
வீட்டில் பல்லி இருப்பது வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டு பூஜை அறையில் வரவேற்பு அறையில் பள்ளி தென்பட்டால் மிகவும் மங்களகரமானது என்றும் சொல்கின்றனர்.
வரும் நாட்களில் அதிக பண வரவை பெற போகிறோம் என்பதனை அது குறிக்கிறது என்று சொல்வதுண்டு
தீபாவளி அன்று வீட்டில் பல்லி இருந்தால் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டுமல்ல
இதனால் மகத்தான மகிழ்ச்சியும் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை
வீட்டில் ஒரே இடத்தில் மூன்று பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான ஒன்று இதனால் உங்களுக்கு நல்ல செய்தி மிக விரைவாக கிடைக்கும் என்பது அர்த்தம்
நீங்கள் புதிய வீட்டுக்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால் அது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுது
அது மட்டுமல்ல பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம்
அதாவது முன்னோர்களின் ஆசிர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும் அத்துடன் அன்னை மகாலட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்க போகிறார் என்பது அர்த்தம் சாஸ்திரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது
32 total views, 2 views today