மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் சிந்தனையுடன் உங்கள் குறிக்கோளை நிச்சயமாக இந்த ஆண்டு பெறுவீர்கள்
செய்தொழில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர்கள் அத்தனையும் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு
உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளை செய்து மன மகிழ்ச்சியாக இருப்பீங்க சமூகநோக்குடன் எந்த செயலை செய்தாலும் நல்ல ஒரு சமூக சேவையுடன் ஈடுபடுவீர்கள்
நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடக்கூடிய சூழ்நிலை இருக்கு
வருமானம் சிறப்பாக இருக்கும் செய்த தொழிலும் நன்றாக நடப்பதால் புதிய கடன் எல்லாம் வாங்க நேரிடாது சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் சூழ்நிலையும் உண்டாகும்
பிறரின் பொறாமைகளுக்கும் போட்டிகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டாக இந்த 2024 உங்களுக்கு அமைந்திருக்கு.
நீங்க தொடுத்திருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமான பலன் அனைத்தும் கிடைக்கும் melmalaiyanoor ammanமற்றபடி வெகு தூரத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வருவதற்கான சூழ்நிலை இருக்கு
மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மேலும் அவசியமான விஷயங்களுக்காக திடீர் அவசரப் பயனெல்லாம் மேற்கொள்ள நேரிடும் குடும்பத்தில சாதகமான சூழ்நிலை நிலவும்
இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும் உற்றார் உறவினர்களிடையே உங்களுடைய செல்வாக்கு உயரும் உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும்
நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல் வடிவம் பெற்று நிற்கும். கடினமான விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள்
உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலகி வைப்பீர்கள் உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்
சமூகத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும் குறைந்த அளவு முதலீடு செய்துhttps://youtu.be/30fI9F5DzRI விருப்பமான வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள் உங்கள் பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அனைத்தும் நீங்கும்
உங்களின் நேர்மறையான போக்கை அனைவரிடமும் காண்பிப்பீர்கள் அதனால் பாராட்டு பெறுவீர்கள்
உங்கள் சூட்சம அறிவு வேலை செய்ய தொடங்கும் எதிர்பாராத வகையில் சௌபாக்கியங்கள் உங்களைத் தேடி வர இருக்கின்றது.
உங்கள் கோரிக்கை அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும் வங்கியில் இருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும்
நெடு நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தில் சாதகமான பரிசீலிக்கப்பட்டு உங்களுக்கு நற்செய்தி ஒன்று கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கு
இதனால் சலுகைகள் கிடைக்கும் மனதிற்கினிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள் உத்தியோகஸ்தர்களுக்கும் அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கும்
திட்டமிட்டு செயல்படக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும் சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும்
பண வரவுக்கு தடை வராது எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் உங்களுக்கு வரும் ஆனாலும் மேல் அதிகாரிகளின் ஆதரவு குறையும்
வியாபாரிகள் விற்பனை பிரதிநிதிகளால் வியாபாரத்தை பெருக்குவீங்க கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே இருக்கும்
கடனை பெற்று கடையை சீரமைப்பீர்கள் புதிய சாதனைகள் உங்கள் பொருள்கள் விற்பனையாகும்
அரசியல்வாதிகள் வெற்றிகளை பெறுவதில் சிரமம் ஏற்படும் ஆகவே உங்களுடைய திட்டங்களை பொறுமையாக செயல்படுத்தவும்.